சென்னை அருகே திருவனந்தபுரம் ரயில் தடம் புரண்டு விபத்து: 7 பேர் காயம்; மீட்பு பணிகள் தீவிரம்
சென்னை: சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் திருவள்ளூர் அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் காயமடைந்தனர். இதனால் இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற திருவனந்தபுரம் மெயில் (எண் 12623) பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் ரயில் எஞ்சின் மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன.

தடம்புரண்ட எஞ்சினும், ரயில் பெட்டிகளும் அருகே நின்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சாய்ந்ததால், இந்த தடத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 7 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆவடியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தடம் புரண்ட இரண்டு பெட்டிகளையும் சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை - அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த வழியாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தற்சமயம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 135 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். வசிஷ்டஜோரி தலைமையில் மீட்புப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
உதவி எண்கள் அறிவிப்பு:
விபத்து குறித்து 044- 25330714 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications