மீண்டும் அவதூறு வழக்கு... தப்பி ஓடி தலைமறைவாகிறாரா நாஞ்சில் சம்பத்?
நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்: முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை அவதூறாக பேசியதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக அணிகள் இரண்டாக பிளவுபட்ட நிலையில் ஈபிஎஸ் அணியை படுமோசமாக ஒருமையில் விமர்சித்து வருகிறார் நாஞ்சில் சம்பத். பாஜகவினரையும் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சிக்க அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது.

பின்னர் நாஞ்சில் சம்பத் மீது தமிழகம் முழுவதும் பல இடங்களில் புகார் கொடுக்கப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டன. இதனால் எந்த நேரத்திலும் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படுவார் என்கிற நிலைமை ஏற்பட்டது.
இதையடுத்து சிறிது காலம் மீடியாக்கள் கண்ணில்படாமல் நாஞ்சில் சம்பத் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் திருவாரூரில் அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை அவதூறாக பேசினார் நாஞ்சில் சம்பத் என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் மீது திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போதுதான் வெளியே வந்த நாஞ்சில் சம்பத் மீது மீண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் கிடைக்கும் வரை மீடியாக்கள் கண்ணில்படாமல் இருப்பார் என்றே தெரிகிறது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications