மோடிக்கு உதவியாக என்னையும் டெல்லிக்கு அனுப்புங்கள்: இது பாரிவேந்தர் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: நரேந்திரமோடிக்கு உதவியாக தன்னையும் டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு கோரி பெரம்பலூர் தொகுதி வாக்காளர்களிடம் பாரிவேந்தர் பிரசாரம் செய்தார்.

பா.ஜ.க. கூட்டணி சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கி, செங்குணம், கவுல்பாளையம் வழியாக நெடுவாசல் என அடுத்தடுத்த கிராமங்களில் பிரசாரம் செய்தார்.

க.எறையூர் கிராம பிரசாரத்தில் பேசிய பாரிவேந்தர்,கூறியதாவது:

This is an election for Change " says IJK leader

" தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சக்களத்தி சண்டை போட்டு அனைத்தையும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்" என குற்றஞ்சாட்டினார்.

''பா.ஜ.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரான நான் உங்கள் முன் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கான தேர்தல் இல்லை.

டெல்லி நாடாளுமன்றத்திற்கான தேர்தல், சட்டமன்றத்திற்கான தேர்தல் என்றால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஓட்டு போடுங்கள். இது டெல்லிக்கான தேர்தல் என்பதால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை மறந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் இங்கு சக்களத்தி சண்டைப்போட்டு தமிழகத்தை குட்டி சுவராக்கி விட்டார்கள். அவர்களை டெல்லிக்கு அனுப்பினால் அங்கும் சண்டைப்போட்டுக்கொண்டு தமிழகத்துக்கான திட்டங்களை தடுத்து விடுவார்கள்.

ஏமாற்றிய காங்கிரஸ்

இப்போது உண்மையான போட்டி என்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான். காங்கிரசுக்கு கடந்த 60 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். ஆனால் காங்கிரஸ் நல்ல திட்டங்கள் ஏதும் கொண்டு வரவில்லை.

குடும்ப அரசியல்

நாட்டை பல ஆண்டுகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆண்டு வருகின்றன. குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு சந்தர்ப்பமாக பொதுமக்கள் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தங்க நாற்கரச்சாலை

ஐந்து வருடம் மட்டும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். தங்க நாற்கரச்சாலை கொண்டு வரப்பட்டது. அப்படித்தான் பாலைவன மாநிலமான குஜராத்தை சோலைவனமாக மாற்றிய நரேந்திரமோடி, இப்போது பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். நரேந்திர மோடி தலைமையிலான அரசால் மட்டுமே ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லிக்கு அனுப்புங்கள்

மோடிக்கு உதவியாக என்னையும் டெல்லிக்கு அனுப்பி வைக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அப்படி செய்தால் இத்தனை ஆண்டு காலம் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு கல்வி உதவி செய்து வந்த நான், உங்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர உழைப்பேன்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+