திராவிட நாடு.. டிரெண்டிங் அல்ல.. பாஜகவிற்கு விடப்படும் எச்சரிக்கை… ஜெ. அன்பழகன் வார்னிங்
மாட்டிறைச்சி தடையால் திராவிடநாடு என்ற கோஷம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது வெறும் டிரெட்டிங் அல்ல; எச்சரிக்கை என்று எம்எல்ஏ அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு பாஜவிற்கு எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திராவிடம் குறித்த கருத்தாக்கங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் பொருளாக மாறியிருப்பதோடு, முக்கிய சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அதில் சில..
|
எச்சரிக்கை
திராவிட நாடு என்பது தென்னிந்தியாவில் இந்துத்துவாவையும் மதவாதத்தையும் திணிக்கும் பாஜகவிற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் எச்சரிக்கை என்று ஜெ. அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
அழிப்போம்
எங்கள் மீது இந்துத்துவத்தை திணித்தால் அதனை அழிப்போம் என்றும் திராவிட நாடு மதச்சார்பற்றது என்றும் சதிஷ் அருண் என்பவர் கடுமையான எதிர்ப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
|
அதி சிறந்த திராவிட நாடு
"கோபத்தில் எழுந்த வார்த்தைகளாக இருக்கலாம் - சாத்தியப்பட்டால், இயற்கைவளம், மனிதவளம் என உலகின் அதி சிறந்த நாடாக திராவிட நாடு இருக்கும்!" என பத்திரிகையாளர் வரவனை செந்தில் பதிவிட்டுள்ளார்.
|
ரெண்டா போகும் நாடு
"மருமகளா வீடு ரெண்டா போகுறது போல மாட்டால.. நாடு ரெண்டா போயிடும் போல" என தங்க இளவரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications