அதிர வைக்கும் "குக்கர்" பார்முலா.. ஆர்.கே. நகரில் ஒர்க் அவுட் ஆனது இப்படித்தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தனது வெற்றிக்கு எந்த மாதிரியான ஃபார்முலாவை அறிமுகம் செய்துள்ளார் என்று விளக்குகிறார் தேர்தல் பணி செய்த தொண்டர் ஒருவர்.

ஆர்.கே. நகரில் 172 பூத்தில் ஒவ்வொரு பூத்திற்கும் முப்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வெறும் பத்து பேரை கூட்டிக்கொண்டு வரவேண்டும்.

ஒரு பூத்துக்கு 300 பேர் (172 X 300 = 51600 பேர் ) இதில் கூட குறைவாக சுமார்40,000 பேர் வேலை பார்த்து இருக்கிறார்கள்.

10 நாளில் 12 கோடி செலவு

10 நாளில் 12 கோடி செலவு


இவர்களுக்கு தினமும் 300 ரூபாய் (40,000 X 300 x 10 நாள் = 12,00,00,000 பன்னிரண்டு கோடி ரூபாய்

அனைவரும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை வீட்டில் இருக்கும் குக்கரை தூக்கிட்டு வரவேண்டும்.

பூ தூவினால், குக்கர் கோலம் போட்டால் அதற்கு தனி கவனிப்பு.

காசுக்கு சேர்ந்த கூட்டம்

காசுக்கு சேர்ந்த கூட்டம்

தேர்தல் பிரசார முடிவு நாளைக்கு முன்பாக ரெண்டு நாள் கடன் சொல்லி இருக்கிறார்கள். கடைசிநாள் அந்த கடன் காசை வாங்க அனைவரும் வந்தாக வேண்டுமே. வேறு யாரும் காசு குடுத்து கடைசி நாள் இழுத்து விட்டால் !!

கடைசி நாள் அவர்கள் அனைவருக்கும் பணம் முறைப்படி வழங்கப்பட்டு ஒரு விசயம் தெளிவாக்கப்பட்டது.

வெற்றி பெற்றால் பணம்

வெற்றி பெற்றால் பணம்

நாங்க காசு விசயத்தில் சரியாக இருப்போம் என்று

எல்லா வீட்டிலும் இருபது ரூபாய் குடுத்து போன் நம்பர் வாங்கி அவர்களிடம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றால் ஓட்டுக்கு சுமார் 10,000 வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எத்தனை கோடி செலவு

எத்தனை கோடி செலவு

சொன்னபடி இவங்க காசு குடுப்பாரு என்று தொகுதி முழுதும் ஒரே பேச்சு. சொன்னபடி 150 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். தேர்தல் செலவு மற்றும் மறைமுக வேலைகள் செய்ய பல ஆட்களை வைத்து இருந்தனர்.

தினகரன் புது ஃபார்முலா

தினகரன் புது ஃபார்முலா

சுமார் 50,000 ஒட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வென்றே தீருவோம் என்று நேற்று சொன்னார். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார். இனிமே இப்படிதான் டிடிவி தினகரனின் புது வித பார்முலா இனி திருமங்கலம் பார்முலா கிடையாது. ஆர் கே நகர் பார்முலாதான் என்று கூறி சிரிக்கின்றனர் களப்பணியாற்றியவர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In R K Nagar the cadres of Dinakaran have bought almost the whole constituency and this is how they did their works.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற