தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்.. தமிழிசை பேச்சால் சர்ச்சை!
தமிழகம் பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

மதுரை: தமிழகம் பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் நாத்திக அரசியலை அகற்றி ஆன்மிக அரசியலை கொண்டுவருவதே பாஜகவின் நோக்கம் என்றார்.

பெரியாழ்வார் மண்
தொடர்ந்து பேசிய அவர் இது பெரியார் வளர்த்த மண் அல்ல பெரியாழ்வார் வளர்த்த மண் என்றார். இதேபோல் அண்ணா வளர்த்த தமிழ் அல்ல ஆண்டாள் வளர்த்த தமிழ் என்றும் அவர் கூறினார்.

ஆத்திக ஆட்சி
நாத்திக ஆட்சியை மாற்றி ஆத்திக ஆட்சியை கொண்டு வந்து ஆன்மிக அரசியலை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார். நாத்திகம் பேசும் இம்மண்ணில் யார் ஆன்மிகம் பேசினாலும் அதனை பாஜக வரவேற்கும் என்றும் தமிழிசை கூறினார்.

ப.சிதம்பரம் என்ன செய்தார்
புதிதாக ஆன்மிக அரசியல் குறித்து யாரும் பேச வேண்டாம் என்றும் ஆன்மிக அரசியலுக்கு வித்திட்டது பாஜக தான் என்றும் அவர் கூறினார். ப.சிதம்பரம் மத்தியில் பதவியில் இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எப்படி முதல்வராக முடியும்
ஸ்டாலினால் கட்சிக்கே தலைவராக முடியவில்லை என்ற தமிழிசை, அவர் எப்படி முதல்வராக முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நல்லது நடக்க வேண்டுமென்றால் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications