"குடிபோதை" விஜயகாந்த்தை அப்புறப்படுத்தும் தேர்தல் இது.. காடுவெட்டி குரு பரபரப்பு பேச்சு

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: எப்போதும் குடிபோதையில் இருக்கும் விஜயகாந்த் போன்ற தகுதியற்ற அரசியல்வாதிகளை அப்புறப்படுத்த பாமக நடத்துகிற போராட்டம்தான் இந்தத் தேர்தல் என்று பாமக எம்.எல்.ஏவும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு கூறியுள்ளார்.

பெரம்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துப் பேசியதாவது:

வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதியிலும் பாமக தனித்துப் போட்டியிடும். தனித்துப் போட்டியிட்டாலே 120 இடங்களில் பாமக உறுதியாக வெற்றிபெறும்.

This is the right time to defeat vijayakanth : Kaduvetti guru

அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் பாமக கூட்டணி வைக்கும். தமிழகத்தில் பாமகவிற்கு 25 லட்சம் ஓட்டு வங்கி உள்ளது. வாக்குக்காக பணம், சாராயம், இலவசங்கள் தரமாட்டோம்.

இது பதவிக்காக பாமக சந்திக்கும் தேர்தல் இல்லை. எந்நேரமும் குடி போதையில் இருக்கும் விஜயகாந்த் போன்ற தகுதியற்ற அரசியல்வாதிகளை அப்புறப்படுத்த பாமக நடத்துகிற போராட்டம் இதுவாகும்.

கடந்த எம்பி தேர்தலில் பாஜகவோடு தொகுதி உடன்பாடுதான் செய்து கொண்டோம். அது அந்தத் தேர்தலோடு முடிந்து விட்டது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+