அரசு பேருந்து கட்டண குறைப்பு கண்துடைப்பு- ஏமாற்றம்: துரைமுருகன் கண்டனம்
பேருந்து கட்டண குறைப்பு வெறும் கண் துடைப்பே என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ரூபாய் கணக்கில் பேருந்து கட்டணத்தை ஏற்றிவிட்டு தற்போது பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் கடந்த 20ம் தேதி முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. திடீரென உயர்த்தப்பட்ட அதிக கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

இதனால் இதனைக் கண்டித்து பொதுமக்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில், இன்று தமிழக அரசு பேருந்து கட்டணங்களை குறைத்து உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
விலை ஏற்றத்தின் போது ரூபாய் கணக்கில் ஏற்றிவிட்டு தற்போது இரண்டு பைசா, ஐந்து பைசா என்கிற அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளதற்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இது தமிழக அரசின் கண் துடைப்பு நடவடிக்கை தான். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து உள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டு உள்ளார்கள். இதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், விலை ஏற்றத்தின் போது மட்டும் ரூபாய் கணக்கில் ஏற்றியவர்கள் தற்போது, பைசா அளவில் குறைத்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக அறிவித்தி இருந்த போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications