மிஸ் உச்சா போகனும்.. ஓ.கே. கையைக் கட்டிக்கிட்டு போ...!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: பள்ளிக்கூடம் என்றாலே கட்டுப்பாடுகள் நிறைய இருக்கத்தான் செய்யும். ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் படு வித்தியாசமான, வினோதமான கட்டுப்பாடுகளைக் கையாளுகிறார்கள்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களே கடுப்பாகிப் போகும் அளவுக்கு இந்த கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றால், உள்ளே படிக்கும் பிள்ளைகள் எப்படி இதைப் பொறுத்துக் கொள்கிறார்கள் என்று நினைத்தாலே படு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இந்தப் பள்ளிக்கூடம் இத்தனைக்கும் காஞ்சிபுரத்திலேயே மிகவும் பிரபலமான பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டுப்பாடுகள்தான் சற்று வியர்க்க வைக்கிறது.

சந்தோஷம் இல்லையே

சந்தோஷம் இல்லையே

பள்ளி வழ்க்கையை நினைத்து பார்த்தாலே சந்தோஷமும் நிம்மதியும் மனதில் தோன்றி மறையும். ஆனால் இந்த காஞ்சிபுரம் பள்ளி மாணவர்களிடம் போய் கேட்டால் நிச்சயம் எதிர்மறையாகத்தான் சொல்வார்கள்.

சீர்திருத்தப் பள்ளி போல...

சீர்திருத்தப் பள்ளி போல...

ஒன்றாம் வகுப்பிலிருந்து இருந்து பிளஸ்டூ வரை உள்ள இந்தப் பள்ளி கிட்டத்தட்ட சீர்திருத்ப் பள்ளி போல இருப்பதாக பெற்றோர்கள் புலம்புகிறார்கள்.

2000 பேருக்கு மேல்

2000 பேருக்கு மேல்

இந்தப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்களுக்கு இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். அதை விட இங்கு போதிக்கும் ஆசிரியர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.

2 கைகளையும் கட்டியபடி என்ட்ரி

2 கைகளையும் கட்டியபடி என்ட்ரி

காலை 8.15 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும். பள்ளி மாணவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் இருந்து இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டுதான் வகுப்பறைக்கு செல்லவேண்டும். கழிவறைக்கு செல்லும் போதுகூட இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டுதான் செல்லவேண்டும்.

நோ பேச்.. நோ மூச்...!

நோ பேச்.. நோ மூச்...!

சக மாணவர்களுடன் வகுப்பறையில்லோ வகுப்பறையின் வெளியிலோ பேசகூடாது.

பேரைச் சொல்லலாமா.. அது நியாயமாகுமா...?

பேரைச் சொல்லலாமா.. அது நியாயமாகுமா...?

ஆண் பெண் படிக்கும் இருபாலர் பள்ளி என்பதால், மாணவர்களும், மாணவியரும் பரஸ்பரம் பேசவோ, பெயர் சொல்லி கூப்பிடவோ கூடாது.

ஆசிரியர்களிடமும் பேசப்படாது...

ஆசிரியர்களிடமும் பேசப்படாது...

அதேபோல மாணவர்கள் ஆசிரியர்களிடமும் பேசக் கூடாது. பாடத்தில் சந்தேகம் என்றாலும் கூட அனுமதி பெற்றபின்தான் பேசவேண்டும்.

லீவே கிடையாது

லீவே கிடையாது

10 மற்றும் 12-வது படிக்கும் மாணவர்களுக்கு அரசு விடுமுறை நாட்களில் கூட விடுமுறை கிடையாது. சிறப்பு வகுப்புகள் என 10 மற்றும் 12-வது படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் படிப்புதான்....

வர்றது தெரியும்.. போறது தெரியலியே..

வர்றது தெரியும்.. போறது தெரியலியே..

காலையில் வரும் நேரம்தான் மாணவர்களுக்கு உத்தரவாதம். ஆனால் மீண்டும் எப்போது வீடு திரும்புவோம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அவர்கள் அனுப்பும் நேரத்தில்தான் வீடு திரும்ப முடியும். அது ராத்திரியானாலும் கூட...

டீச்சர்ஸுக்கும் யூனிபார்ம் உண்டு

டீச்சர்ஸுக்கும் யூனிபார்ம் உண்டு

இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கும் கூட சீருடை உண்டு. அதில்தான் வர வேண்டும்.

தம்பிகளே.. தங்கைகளே...

தம்பிகளே.. தங்கைகளே...

வகுப்பு மாணவர்களை பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. மாறாக, தம்பி தங்கை எனறுதான் அழைக்க வேண்டும்.

லேட்டா வந்தா கட்டு அபராதம் 50

லேட்டா வந்தா கட்டு அபராதம் 50

பள்ளிக்கு தாமதமாக வரக் கூடாது. மீறி வந்தால், 50 ரூபாய் அபராதம் கட்டியாக வேண்டும்.

அதெப்படி மிஸ் அடிக்கலாம்...

அதெப்படி மிஸ் அடிக்கலாம்...

மாணவர்கள் ஏதாவது தவறு செய்தால் ஆசிரியர்கள் அவர்களை அடிக்கக் கூடாது.

நோ ஷேரிங்...

நோ ஷேரிங்...

மதிய உணவை யாரும் யாருடனும் ஷேர் செய்யக் கூடாது.

புளோருக்கு ஒரு இன்சார்ஜ்

புளோருக்கு ஒரு இன்சார்ஜ்

பள்ளியின் ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு இன்சார்ஜ் ஆசிரியர் இருப்பார். அவரது வேலை மாணவர்களைக் கண்காணிப்பது அல்ல.. மாறாக ஆசிரியர்களைக் கண்காணிப்பது.

பாத்ரூம் போகனும்னா..

பாத்ரூம் போகனும்னா..

மாணவர்கள் பாத்ரூமுக்குப் போவதாக இருந்தால் ஆசிரியர்களிடம் கேட்கத் தேவையில்லை. மாறாக இந்த புளோர் இன்சார்ஜிடம்தான் பெர்மிஷன் கேட்க வேண்டுமாம்.

உட்காராதீங்க டீச்சர்...

உட்காராதீங்க டீச்சர்...

ஆசிரியர்கள் வகுப்பறையில் நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும். உட்காரக் கூடாது. மேலும் மாணவர்களிடம் தேவையில்லாமல் பேசவும் கூடாதாம்.

புக்குல என்ன இருக்கோ.. அப்படியே மக்கப் பண்ணுப்பா!

புக்குல என்ன இருக்கோ.. அப்படியே மக்கப் பண்ணுப்பா!

பரீட்சையின்போது புத்தகத்தில் உள்ளதை மட்டுமே எழுத வேண்டும். சொந்தவ வார்த்தைகளைப் போட்டு எழுதவே கூடாதாம். மீறி எழுதினால் முழு மதிப்பெண் கிடையாதாம்.

தெருவில் கைகட்டி ஊர்வலம்

தெருவில் கைகட்டி ஊர்வலம்

இந்த பள்ளிக்கூடத்து மாணவர்கள் பள்ஏளியில் கைகளைக் கட்டியே பழகி விட்டதால், தெருவில் சாதாரணமாக சென்றாலும் கூட கைகளைக் கட்டியபடியே நடப்பதைக் காணலாம்.

ஏன் இப்படி ?

ஏன் இப்படி ?

பள்ளி என்பது மாணவர்களுக்கு புத்தக கல்வி மட்டும் புகட்டும் சாலை இல்லை. எல்லாவகையான அறநெறிகளை மாணவர்களுக்கு புகட்டும் இடம்மாகும். ஆனால், மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை தராமல் பல கட்டுப்பாடுகள் விதித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டி பயன் என்ன என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள்.

ஆனாலும் இங்குதாய்யா வந்து விழறாங்க...

ஆனாலும் இங்குதாய்யா வந்து விழறாங்க...

இப்படிப் புலம்பினாலும் கூட இந்தப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கவே பெற்றோர்கள் விழுந்தடித்து வருகிறார்கள். அதிக மார்க் எடுக்க முடியும் என்பதோடு கட்டுப்பாடுடன் வளர்வார்கள் என்பதாலும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+