வறண்டு கிடக்கும் குற்றால அருவியில் அம்மன் சிலையை நீராட்டும் அதிசய நீர்
நெல்லை: குற்றாலத்தில் அருவிகள் நீர் இன்றி காய்ந்து கிடக்கையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஒரேயொரு அம்மன் சிலைக்கு மட்டும் நீர் வருவது மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலமாகும். இந்த காலங்களில் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவது வழக்கம். ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.

இக்காலங்கள் போக ஜனவரி இறுதி முதல் மே மாதம் வரை அருவிகளில் தண்ணீர் வறண்டு போகும். தற்போது நீர் வறண்டு குற்றாலம் மெயின் அருவிகாட்சியளிக்கிறது. அருவியின் அனைத்து பகுதிகளும் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது.
இந்நிலையில் அருவிகொட்டும் பாறையில் முன்னோர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மீது தண்ணீர் கொட்டி நீராடும் சுற்றுலாப் பயணிகள் மீதும் தண்ணீர் விழுவது ஐதிகமானது. தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அருவி வறண்டுள்ளது. ஆனால் அருவியின் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு சிலைக்கு மட்டும் அதாவது "நிகம்பசூதனி அம்மன்" சிலைக்கு மட்டும் நீர் வருகிறது.
பாறைகளில் நீர்கசிவு உருவாகி அம்மன் சிலையை குளிர்வித்து வருகிறது. பாறை ஊற்று வழியாக மிகச் சரியாக இடைவிடாது நிகம்பசூதனி அம்மனுக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும் காட்சி பக்தர்களை அதிசயத்தில் ஆழத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications