"மாமியார்".. சேரோடு கட்டி, வாயில் துணி திணித்து.. அசிங்கமா சிக்கிய "பெண்".. தூத்துக்குடி போலீஸ் சபாஷ்
தூத்துக்குடி: ஒரு வாரம் நடந்த போலீசாரின் தீவிரமான விசாரணைக்கு பிறகு குற்றவாளி கைதாகி உள்ளார்.. என்ன நடந்தது தூத்துக்குடி அஸ்வினி வீட்டில்?
முத்தையாபுரம் தவசிபெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் அற்புதராஜ் என்ற குட்டி.. இவருக்கு 65 வயதாகிறது.. தூத்துக்குடி ஸ்பிக்நகர் பஜாரிலேயே, சொந்தமாக பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பெயர் செல்வராணி.
பேன்ஸி ஸ்டோர்: இவர்களுக்கு தங்கதுரை, ஜான் செல்வசீனி என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே கல்யாணமாகிவிட்டது.. தங்கதுரையின் மனைவி பெயர் அஸ்வினி.. 35 வயதாகிறது.. 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தங்கதுரை குடும்பத்தினர் சென்னையிலும், ஜான் செல்வசீனி குடும்பத்தினர் தஞ்சாவூரிலும் வசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கதுரை, அஸ்வினியையும், மகனையும் அழைத்து கொண்டு, தூத்துக்குடி முத்தையாபுரத்திலுள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்தார்.. பிறகு, அஸ்வினி, மகனை அங்கேயேவிட்டு, தங்கதுரை மட்டும் மீண்டும் சென்னைக்கு கிளம்பி சென்று விட்டார்.
அஸ்வினி: இந்நிலையில், கடந்த வாரம் அற்புதராஜ் வழக்கம்போல் பேன்சி ஸ்டோருக்கு சென்று விட்டார். இரவு 7 மணியளவில் வீட்டில் செல்வராணி, மருமகள் அஸ்வினி ஆகியோர் டிவி பார்த்து கொண்டிருந்தார்கள்.. வீட்டின் வாசலில் ஜஸ்வந்த் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதனால், கதவை திறந்து வைத்திருந்தனர்.
அந்த நேரம் பார்த்து, 2 மர்மநபர்கள் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்தனர்.. அவர்கள் பர்தா அணிந்திருந்தனர்.. கையில் கூர்மையான கத்திகளை வைத்திருந்தனர்.. செல்வராணி, அஸ்வினியின் கழுத்தில் கத்தியை வைத்து, நகைகளை கழட்டி தருமாறு மிரட்டியிருக்கிறார்கள்.. இதனால் பயந்துபோன மாமியாரும், மருமகளும், நகைகளை கழட்டி அவர்களிடம் தந்தனர்..
செல்வராணி: பிறகு, வாசலில் விளையாடி கொண்டிருந்த ஜஸ்வந்த்தை உள்ளே அழைத்துவந்து ஒரு சேரில் கட்டிப்போட்டார்கள்.. அதேபோல, செல்வராணி, அஸ்வினியையும், சேரில் உட்காரவைத்து, துப்பட்டாவால் கைகளை கட்டிப்போட்டு, அவர்களின் வாயில் துணியை வைத்து அடைத்தனர்.. பிறகு, பீரோவிலிருந்த 65 பவுன் நகைகளையும் கொள்ளையடித்து கொண்டு ஓடிவிட்டார்கள்.
வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டதால், இவர்களால் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைக்க முடியவில்லை.. எனவே, நீண்ட நேரம் போராடி, தங்களது கட்டுகளை இருவருமே அவிழ்த்தனர். பிறகு, பேன்ஸி ஸ்டோரிலிருந்த அற்புதராஜிக்கு தகவல் தந்தனர்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்
தூத்துக்குடி: இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர்.. அந்த பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.. கொள்ளையடித்த 2 மர்நபர்களும், தூத்துக்குடிக்கு சென்ற பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால், அந்த மர்மநபர்கள் யார் என்ற அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் விரிவுபடுத்தினார்கள். மர்மநபர்கள் கடைசிவரை சிக்கவில்லை.. ஆனால், இதற்கெல்லாம் மாஸ்டர் பிளான் போட்ட நபரை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.
சாட்சாட் மருமகள் அஸ்வினிதான் இதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார். இவர் ஆன்லைன் பிசினஸ் செய்து வருகிறாராம்.. ஆனால், நிறைய பணத்தை, பிசினஸில் இழந்துவிட்டாராம். இந்த இழப்புகள் குறித்து வீட்டில் யாரிடமும் எதையும் சொல்லாமல் மறைத்துள்ளார்.. அத்துடன், பணத்தை இழந்ததால், அந்த இழப்பை சரி செய்வதற்காக, மாமியார் வீட்டிலேயே கைவரிசை காட்டவும் துணிந்துள்ளார்..
அதிரடி கைது: இதற்காகவே, 2 ஆட்களை தயார்செய்து, மாமியார் வீட்டுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்கும்படி ஸ்கெட்ச் போட்டு தந்துள்ளார்.. இதற்கு அஸ்வினியின் சகோதரியும் உதவியாக இருந்திருக்கிறார். இவ்வளவையும் போலீசார் கண்டுபிடித்ததையடுத்து, மருமகள் அஸ்வினி, அவரது சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications