சாலையில் கிடந்த கேமராவை எடுக்கச் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் பலி - ஓட்டுநருக்கு அடி உதை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையில் தவறி விழுந்த தனது கேமராவை எடுக்கச் சென்ற போது பேருந்து மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் விபத்துக்குக் காரணமாக பேருந்து ஓட்டுநரை அடித்து உதைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சுற்றுலா வந்திருந்த கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராமன் என்ற மாணவருடைய கேமரா தவறுதலாக சாலையில் விழுந்து விட்டது.
கேமராவை எடுப்பதற்காக சென்ற மாணவர் மீது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்து கொண்டிருந்த பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், விபத்திற்கு காரணமாக பேருந்தைச் சிறை பிடித்து, பேருந்து ஓட்டுநரை அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார்.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications