அழகிரி பேரணியில் பங்கேற்க குவிந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஆதரவாளர்கள்
Recommended Video

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி சற்று நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி தொடங்க உள்ளது.
இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
காலை 10 மணி அளவில் பேரணி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வளவு இல்லாவிட்டாலும், சில ஆயிரம் பேர் பங்கேற்க வந்துள்ளனர்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கருப்பு வண்ண ஆடைகளுடன் அங்கே குவிந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதற்காக மெரினாவில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து கருணாநிதி சமாதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகிரி கடந்த பல நாட்களாக திட்டமிட்டும் ஒரு லட்சம் பேர் கூடவில்லை என்பதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications