ஜெ. வழக்கு தீர்ப்பு: தமிழக- கர்நாடக எல்லையில் போலீஸ் குவிப்பு... தமிழக வாகனங்கள் கணக்கெடுப்பு!
ஓசூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதால் தமிழக, கர்நாடக எல்லையில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இரு மாநில போலீஸாரும், எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹா சிறை வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கோர்ட்டில் தனி நீதிபதி குன்ஹா தீர்ப்பை அளிக்கவுள்ளார். இதற்காக ஜெயலலிதாவும், அவரது தோழியும், இந்த வழக்கில் இணை குற்றம் சாட்டப்பட்டவருமான சசிகலாவும் பெங்களூர் புறப்பட்டுள்ளனர்.
தீர்ப்பையொட்டி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஓசூர் அருகே தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு வந்து அங்கு இரு மாநில எல்லைப்பகுதியை பார்வையிட்டார். அவருடன் உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ரெட்டி கூறுகையில், தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு கோர்ட் வளாகம் மற்றும் இரு மாநில எல்லைகளில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் வரலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம் என்றார்.
இதே போல் சேலம் சரக டி.ஐ.ஜி. வித்யா குல்கர்னி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் மாநில எல்லை பகுதியில் ஆய்வு செய்தனர். ஜூஜூவாடி பகுதியில் தமிழக-கர்நாடக மாநில எல்லையில் போலீசார் பாதுகாப்புக்காக அதிகளவில் நிறுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த உயர்போலீஸ் அதிகாரிகளும், கர்நாடகாவை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளும் முகாமிட்டு உள்ளனர். இதே போல் மேட்டூர் கொளத்தூரில் இருந்து பாலாறு வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட் டுள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் எத்தனை வந்து செல்கிறது என்று கணக்கிட்டு வருகிறார்கள்.
மேலும் மாநில எல்லையோரம் அமைந்துள்ள கோவிந்தபாடி, பாலாறு, காவேரிபுரம் ஆகிய கிராமங்ளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தீர்ப்பு தினத்தையொட்டி இரு மாநில எல்லைப் பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications