115 சத்துணவு அமைப்பாளர் பணியிடம்: குவிந்த பெண்களை பார்த்த அதிகாரிகள் திகைப்பு
நெல்லை: நெல்லையில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் அதிகாரிகள் திகைக்தனர்.
நெல்லை மாவட்ட சிறுபான்மை பள்ளிகளில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்த 10 யூனியன்களை சேர்ந்த 3,300 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நெல்லை ஆர்டிஓ அலுவலகம், நெல்லை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேர்முக தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வு கலெக்டரின் நேரடி பார்வையில் நடந்தது.
இதில் தகுதியானவர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அதன் அடிப்படையில் கலெக்டர் பணி நியமன ஆணை வழங்குவார் என சத்துணவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேர்முக தேர்விற்காக பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடனும், பெற்றோருடனும் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் திருவிழா கூட்டம் போல் இருந்தது.
குறைந்த இடத்திற்கு இத்தனை பெண்கள் போட்டியிட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications