முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்விற்காக ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில், ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை போலீஸ் கைது செய்து உள்ளது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடந்த 7 ஆண்டுகளாக சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் நினைவேந்தல் நிகழ்வை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், நினைவேந்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார்.
அதன்படி, மாலை 4 மணியில் இருந்து ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் மெரினாவில் சென்றுவிடாதபடி, போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இருப்பினும் கூட்டம் அதிகரித்து வருவதால், போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நினைவேந்தலில் கலந்து கொண்டிருப்பவர்களைக் கைது செய்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் வைப்பதற்கு போலீஸார் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை போலீஸ் கைது செய்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications