சென்னை ஹைகோர்ட் நீதிபதிக்கு போனில் மிரட்டல்: மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஹைகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக உள்ளவர் கர்ணன். இவரது வீட்டு தொலைபேசிக்கு தன் பெயரை கூறிக் கொள்ளாமல் மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அப்போது நீதிபதி கர்ணனை தாக்கப் போவதாக அந்த நபர் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக கோர்ட் பதிவாளருக்கு புகார் அனுப்பி வைத்தார் நீதிபதி கர்ணன். அதில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளாரிடம் நீதிபதி கர்ணன் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்க நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆணையிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications