அரசுப்பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலே பலி
திருப்பூர் அருகே அரசுப்பேருந்தும்,காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே அரசுப்பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற ஆல்டோ காரும் அவினாசிப்பாளையம் என்ற இடத்தில் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த பயங்கர விபத்தில் காரில் பயணம் செய்த தாராபுரத்தைச் சேர்ந்த சாதிக். நசிருதீன். சாதிக்பாட்சா ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறி்தது அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications