சென்னையில் பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னை எழும்பூரில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த டாக்டர் ரோகினி பிரேம் குமாரி (64) தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் ரோகினி பிரேம் குமாரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்த எழும்பூர் சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிறுவன் உள்பட ஹரி, ராஜா ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் 3 பேரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. தற்போது இவர்கள் 3 பேரும் ரோகினி பிரேம்குமாரி வீட்டிற்கு 7ஆம் தேதி இரவு திருட வந்துள்ளனர். அப்போது நாய் குறைக்கும் சத்தம் கேட்டு ரோகினி பிரேம்குமாரி வெளியே வந்துள்ளார்.
அப்போது ரோகினி பிரேம்குமாரியை 3 பேரும் சேர்ந்து கை மற்றும் வாயை கட்டி கொலை செய்து வீட்டின் ஓரமாக போட்டு சென்றுவிட்டார்கள். மேலும் செல்போன், கம்மல், செயின், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications