அரியலூர் அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாப பலி.. வயலில் வேலை செய்தபோ.த நேர்ந்த சோகம்!
அரியலூர் அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்: கல்லூர் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வடகிழக்குப் பருவமழை கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் லேசாக மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் ஏற்பட்டது.
இதில் திருமானூரை அடுத்த கல்லூர் என்ற கிராமத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த அஞ்சலை, உண்ணாமலை, செந்தமிழ்செல்வி ஆகியோர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications