கரூர்: அணையில் குளித்த 3 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி
கரூர்: மாவட்டம் சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த மூன்று இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டியை சேர்ந்தவர் ஷேக்பரித்(20). இவர் திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஷேக்பரித் தன்னுடைய நண்பர்களான இதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் அலி(21), ஹர்ஷத் (20) ஆகியோருடன் கொத்தபாளையம் அமராவதி அணைக்கு நேற்று குளிக்க சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். மூவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.
குளிக்கச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த உறவினர்கள் அணை பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கே அவர்களின் உடைகள் மட்டுமே இருந்தது. இதனால் பதறிய உறவினர்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் மூவரின் சடலைத்தையும் மீட்டனர். அப்போது கூடியிருந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
இளம் வயதில் ஆற்றில் மூழ்கி பலியாகிவிட்டார்களே என்று கூறி அழுதனர். அவர்களை தேற்றிய காவல்துறை அதிகாரிகள், மூவரின் சடலங்களையும் கரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications