'இடி’ தான் விபத்திற்குக் காரணம்... நாங்கள் பொறுப்பல்ல: கட்டுமான நிறுவனம் ‘திமிர்’ விளக்கம்
சென்னை: இதுவரை 11 பேரின் உயிரைப் பலி வாங்கியுள்ள சென்னைப் போரூர் 11 மாடி கட்டிட விபத்திற்கு இடி விழுந்ததுதான் காரணம் என கட்டுமான நிறுவனம் ‘பிரைம் சிருஷ்டி'யின் இயக்குனர் பாலகுரு விளக்கமளித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தக் கோர கட்டிட விபத்திற்கு கட்டிடத்தின் மீது இடி விழுந்தது தான் காரணம் என விபத்துக்குள்ளான கட்டிடத்தைக் கட்டிவரும் கட்டுமான நிறுவனமான பிரைம் சிருஷ்டியின் இயக்குநர் பாலகுரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
‘11 மாடி கட்டிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. எந்த விதி மீறலும் கிடையாது. இடி விழுந்ததுதான் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு காரணம். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பு ஏற்க முடியாது.
கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிந்தபிறகுதான் வழக்கமாக இடிதாங்கும் கருவி பொருத்தப்படுவது வழக்கம். கட்டிடம் இப்போதுதான் நிறைவு கட்டத்தை எட்டி வந்தது. விபத்தின்போது 50 பேர் கட்டிடத்தில் இருந்தனர். சம்பவத்தின்போது பலத்த மழை பெய்தது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications