கன்னியாகுமரியில் இடியுடன் மழை.. பெங்களூரையும் இரவு நேரத்தில் குளிர்விப்பதால் மக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கொட்டித் தீர்க்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் மழை கொட்டி வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால் கடந்த ஒரு வாரமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா அருகே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மற்றும் வட தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், சுங்கான்கடை, புத்தேரி உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடுமையான வெயில் சுட்டெரித்த நிலையில் இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் பெங்களூரிலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் இயல்பாக காணப்படும் வானம் இரவு நேரத்தில் கொட்டித்தீர்ப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications