சென்னையில் ஐபிஎல் போட்டிகளை மாற்ற பரிசீலனை.. டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அடிபணிந்தது ஐபிஎல் நிர்வாகம்...சென்னை போட்டிகள் இடமாற்றம்- வீடியோ

  சென்னை: தமிழகத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து டிக்கெட் விற்பனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது.

  Ticket sale for IPL matches in Chennai is postponed

  ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தால் வீரர்கள் மைதானத்திற்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

  ஒரு வழியாக நடைபெற்ற போட்டியில் செருப்பு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்ப்பு காரணமாக சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

  இதன் காரணமாக வரும் 20 ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை துவங்குவதாக இருந்தது. இந்த டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Ticket sale for IPL matches in Chennai is postponed. IPL Management plans to Change the cricket matches from Chennai due to protest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற