வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்!
மும்பை: நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தனது அசாத்திய பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 போட்டியில் 153 கி.மீ வேக பவுன்சர்களையும், 'பாடி லைன்' தாக்குதல்களையும் எதிர்கொண்டு அவர் ஆடிய 96 ரன்கள் ஆட்டம் இன்னும் பேசுபொருளாகவே உள்ளது.
இந்த நிலையில் 15 வயது சிறுவனின் பேட்டிங் திறமையைக் கண்டு கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரே வியந்து பாராட்டியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைல் குறித்து சச்சின் பகிர்ந்துள்ள கருத்துக்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் குறித்துப் பேசிய சச்சின் டெண்டுல்கர், அவரிடம் இருக்கும் தனித்துவமான 'ரிஸ்ட் ஒர்க்' வியப்பை அளிக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷியிடம் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவரது அசாத்திய ரிஸ்ட் வொர்க் தான் (Wrist work). அவர் மைதானத்தில் பந்தை சும்மா காற்றில் சுழற்றவில்லை. மாறாக பந்தின் போக்கை மிக நேர்த்தியாகக் கையாள்கிறார் என்று சச்சின் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாம், மற்ற இளம் வீரர்களை விடவும், பந்து வீச்சாளர் வீசும் 'லைன் அண்ட் லென்த்தை' வைபவ் மிகவும் முன்கூட்டியே கணித்து விடுகிறார்.
அதுதான் அவரது பேட்டிங்கின் மிகப்பெரிய பலம் என சச்சின் பாராட்டியுள்ளார். கடந்த போட்டியில் ககிசோ ரபாடா வீசிய 153 கி.மீ வேக பவுன்சர் வைபவ்வின் ஹெல்மெட்டைத் தாக்கியபோதும், சற்றும் பயப்படாமல் அடுத்த ஓவரிலேயே சிராஜின் பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இது, 1989-ல் தனது 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களில் அடிவாங்கி, மூக்கில் ரத்தம் கொட்டிய பிறகும் "நான் விளையாடுவேன்" என்று ஒற்றை வார்த்தையில் இந்தியாவை மீட்ட வரலாற்றுச் சம்பவத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
அதை உறுதிப்படுத்துவது போல தற்போது சச்சினே வைபவ்வை பாராட்டியுள்ளார். இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் வைபவ்வுக்கு பவுன்சர் வீசியதை 'பாடி லைன்' தாக்குதல் என விமர்சித்த சூழலில், சச்சின் டெண்டுல்கர் வைபவ்வின் தொழில்நுட்ப ரீதியான பேட்டிங் திறமையைப் பாராட்டியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சினே ஒரு 15 வயது சிறுவனின் பேட்டிங் நுணுக்கங்களைப் பாராட்டியுள்ளார் என்றால், வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறுவது உறுதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் விரைவில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications