உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்: டி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி நீடிக்கும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தக் கூட்டணி குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் உலா வருகின்றன. காங்கிரஸுக்கு இத்தனை இடங்களைக் கொடுத்திருக்காமல், திமுக அதிக இடங்களில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் காங்கிரஸ் வெல்லாத இடங்களில் திமுகவினர் சரியாக வேலை பார்க்கவில்லை என்று தான் கருதுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கூட்டணி தொடரும்
சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் அமைத்த கூட்டணி நீடிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கும் இது நீடிக்கும்.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்
சட்டசபையில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும். எப்போதுமே நாங்கள் கூட்டணிக் கட்சிகளை மதிப்பவர்கள். அது சட்டசபையிலும் தொடரும்

காங். தீவிரம் காட்டாத ஈழப் பிரச்சினை
காங்கிரஸ் கட்சி அதிக தீவிரம் காட்டாத ஈழத் தமிழர் பிரச்சினை போன்றவற்றில் நாங்கள் எங்களது கருத்துக்கேற்ப, சுதந்திரமாக செயல்படுவோம்.

அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து
சட்டசபையில் அரசு எப்படி நடந்து கொள்கிறதோ அதை வைத்து எங்களது நடவடிக்கையும் இருக்கும். அரசின் செயல்பாடுகளைப் பொறுத்து எங்களது உத்திகளும் அமையும்.

உள்ளாட்சித் தேர்தல் வியூகம்
இப்போதுதான் சட்டசபைத் தேர்தல் முடிந்துள்ளது. அடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்திகளை கட்சி மேலிடம் வகுத்து, கட்சி பேச்சாளர்களுக்குத் தெரிவிக்கும். அதற்கேற்ப மக்களிடம் வைக்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து முடிவெடுத்து அதை செயல்படுத்துவோம்.

ரூ. 570 கோடி விவகாரம்
ரூ. 570 கோடி விவகாரம் தொடர்பான உண்மைகள் வெளிவந்தாக வேண்டும் அதற்காகவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதில் சிபிஐ விசாரணை நடந்தால்தான் உண்மை தெரிய வரும். இது தனிப்பட்ட நபருக்குச் சொந்தமான பணமா அல்லது வங்கிப் பணமா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வங்கிப் பணம் என்றால், கொண்டு சென்ற விதத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. அது தெளிவுப்படுத்தப்பட வேண்டும். எனவே சிபிஐ விசாரணை அவசியமாகிறது என்றார் அவர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications