மூவரை கொன்ற ஆட்கொல்லி 'ஊட்டி' புலி சுட்டுக் கொலை!
ஊட்டி: ஊட்டி அருகே மூவரை அடித்துக் கொலை செய்த ஆட்கொல்லி புலியை அதிரடிப்படையினர் நேற்று மாலை சுட்டுக்கொன்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா சுற்றுப்புற பகுதிகளில் சோலாடா, அட்டபெட்டு, குந்தசப்பை ஆகிய பகுதிகளில் 3 பேரை புலி அடித்து கொன்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

3 பேரை கொன்ற புலியை கடந்த 18 நாட்களாக, வனத்துறையினர் மற்றும் போலீசார் தேடி வந்தனர். புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 78 இடங்களில் கேமராக்கள்; பரண்கள்; கூண்டுகள் உட்பட வியூகங்களை வைத்து புலியை தேடி வந்தனர்.
மேலும் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்கும் முயற்சியும் நடைபெற்றது. இந்நிலையில் கப்பச்சி கிராமத்தில் பசு மாட்டையும் புலி அடித்து கொன்றது.
இதனால் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் கடந்த 18 நாட்களாக ஊட்டியில் நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications