விடிய, விடிய பெய்த மழையால் நெல்லையில் 27 வீடுகள் இடிந்தன!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி விடிய, விடிய பலத்த மழை நீடித்தது. அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 139 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 27 வீடுகள் இடிந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் தொடங்கி பெய்து வந்தது. இந்த நிலையில் 3 நாட்கள் வெயில் சுட்டெரித்தது. இடையிடையே அவ்வப்போது லேசான மழையாக பெய்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
நெல்லையில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டை அண்ணா நகர், ஹைகிரவுண்டு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மனகாவலம்பிள்ளை நகர் பகுதியில், பிரான்குளம் பகுதியில் தண்ணீர் பெருமளவு தேங்கியது.
மனகாவலம்பிள்ளைநகர், அருந்ததியர் காலனி, கக்கன் நகர், சாந்தி நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. பெரும்பாலான வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி நேருஜி பூங்காவில் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை ரெயில்வே ஃபீடர் ரோடு, செயின்ட் பால்ஸ் ரோடு மற்றும் இலந்தைகுளம் பகுதிகளிலும் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. ஒரு வீடு இடிந்தது.
நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் முன்பு பாதாள சாக்கடையில் மழைநீரும் தேங்கி நின்றது. இதனால் ரோட்டில் வெள்ளநீரும், சாக்கடையும் கலந்து ஓடியது. தச்சநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவில் பீடங்கள் இடிந்து விழுந்தன. நெல்லை மாநகராட்சி பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த மழையில் 27 வீடுகள் இடிந்துள்ளன.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகிய மழை அளவு மில்லி மீட்டரில்: சங்கரன்கோவில்-139, ராதாபுரம்-104, பாளையங்கோட்டை-102, ஆய்குடி-100, சிவகிரி-57.2, தென்காசி-56.2, செங்கோட்டை-43, குண்டாறு -42.3, நெல்லை-40, நம்பியாறு-29, பாபநாசம்-20, நாங்குநேரி-14, சேரன்மாதேவி-10, சேர்வலாறு-7, அம்பை-4.2, மணிமுத்தாறு-3.8.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications