Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்.. கந்தசஷ்டி விழாவை காண லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்துவரும் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று கந்தசஷ்டி விழா நடக்கிறது. இதில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் விழா உலக புகழ் பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது . இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் முருகனுக்காக பயபக்ததியுடன் பக்தர்கள் பலர் விரதம் இருந்து வருகிறார்கள். வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது.

Tiruchendur Kandashashti Murugan

கந்த சஷ்டி விழா தொடங்கிய 22ம் தேதி முதலே தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, சண்முகருக்கு உச்சிகால பூஜை நடைபெற்று வருகிறது, யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை தினமும் நடக்கிறது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி பக்தர்கள் சிவன், பார்வதி, கிருஷ்ணர், விநாயகர், முருகர், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வருகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

அதன்பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருக்கிறார்கள். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கந்த சஷ்டியின் 7-ம் திருநாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+