திருச்செந்தூரில் சர்ப்ரைஸ்.. தெய்வானைக்கு "ஷவர்" குளியல்.. பனங்கிழங்கை உரித்து லபக்னு விழுங்கி.. செம
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலின் தெய்வானையை நினைவிருக்கிறதா? பாகனை அடித்து கொன்ற அதே தெய்வானை யானைதான், தற்போது மீண்டும் இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தெய்வானையை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்டு வருகிறது தெய்வானை என்ற 27 வயது யானை.. கடந்த வருடம் யானைப் பாகன் உதயகுமார் (45) மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் மூர்க்கத்தனமாக தாக்கியது. இதில் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பாகன் உதயகுமார்
இதையடுத்து, பாகன் உதயகுமார் உயிரிழந்ததால் யானை தெய்வானை சோகத்துடன் காணப்பட்டது. அதற்கு பிறகு, யானை மீது தண்ணீர் பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் கட்டிப்போடப்பட்டது.. யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு பக்தர்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
ஆனால், 3 நாட்களாகவே சரிவர அதாவது இயல்பான உணவை உட்கொள்ளவில்லை.. பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று பார்த்து கொண்டிருந்தது.. பாகனின் நினைவிலேயே வாடிய யானை, ஒரு வார காலத்துக்கு பிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைமைக்கு வந்தது..
செல்லப்பிள்ளை தெய்வானை
எனினும், 80 வருடத்தில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லையாம்.. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால், யானைகள் தும்பிக்கையால் இப்படி தாக்கிவிடுமாம். தெய்வானையும் அப்படித்தான் தாக்கியிருக்கிறது என்பதால், இது யானையின் தவறு கிடையாது என்ற கருத்துக்களும் எழுந்தன..
செல்ல பிள்ளையாகவும், விளையாட்டு பிள்ளையாகவும் தெய்வானை இப்போதுவரை இருந்து வருகிறது. அதேசமயம், தெய்வானை யானை தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களாலும், வனத்துறையாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
சரவணப்பொய்கையில் நீராடி
தெய்வானை யானை சரவண பொய்கையில் நீராடுவது வழக்கமாகும்.. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால், வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக யானையை ஷவர் குளியலில் குளிக்க வைக்கிறார்கள். இதைதவிர, காலை மாலை 2 வேளையும் தெய்வானை நடைபயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
நாற்று, தென்னங்கீற்று, கரும்பு, தர்பூசணி, தென்னம்பூ, ஆரஞ்சு உள்ளிட்டவைகளை தெய்வானை யானை விரும்பி சாப்பிடுமாம்.. எனவே, இவைகளை தினந்தோறும் சாப்பிட தந்துவருகிறார்கள். தற்போது தூத்துக்குடி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனங்கிழங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன..
பாசத்துடன் பனங்கிழங்கு
இதனால் பக்தர்கள் பலரும் கோயிலுக்கு வரும்போது, தெய்வானைக்கு பனங்கிழங்குகளை வாங்கி தருகிறார்கள்.. பக்தர்கள் பாசத்துடன் தரும் இந்த பனங்கிழங்குகளை தெய்வானை விரும்பி சாப்பிடுகிறது..
அதுவும் துதிக்கையால் பனங்கிழங்கின் தோலை உரித்து தூரப்போட்டுவிட்டு, நடுப்பகுதியின் நாரையும் நீக்கிவிட்டு, பனங்கிழங்கை மட்டும் சுவைத்து ருசித்து சாப்பிடுகிறது.. இதனை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.. தெய்வானை பனங்கிழங்கு சாப்பிடும் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications