டெங்கு எதிரொலி: நிலவேம்பு கசாயத்திற்கு முண்டியடிக்கும் மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்திற்காக அரசு மருத்துவமனைகளில் அலைமோதுகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதுவரை 3 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். பிற காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலை தடுப்பதில் சித்த மூலிகை மருந்தான நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள திருமூலர் மாளிகை கட்டிடத்தில் பருவமழை காலம் துவங்கும் முன்பே கசாயம் வழங்க சிறப்பு பிரிவு திறந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது இந்த சிறப்பு பிரிவு செயல்படவில்லை. மேலும் வழக்கமான மருந்துகள் கொடுக்கப்படும் இடங்களில் மட்டும் இந்த கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் டெங்கு தலை தூக்கியுள்ளதால் அதில் இருந்து தற்காத்து கொள்ள பலர் நில வேம்பு கசாயம் வேண்டி நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு காத்து கிடக்கின்றனர்.
காலை 7 மணி முதலே பொதுமக்கள் வந்து காத்து கிடக்கின்றனர். சிலர் கசாயத்தை பாத்திரங்களில் வீட்டுக்கு வாங்கி செல்ல முற்படுகின்றனர். ஆனால் மருத்துவமனை சார்பில் நாள் ஒன்றுக்கு 25 லிட்டர் மட்டுமே நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் அரை மணி நேரத்தில் கசாயம் காலியாகி விடுகிறது. எனவே இந்த கசாயத்தை கூடுதலாக தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications