பஞ்சர் ஆனதால் வந்த கொடூரம்.. திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி.. கதறிய பெண்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் அமர்ந்திருந்தவர்கள் மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

Tirupathur accident causes death of 7 ladies early in the morning

சண்டியூர் பகுதியில் வேனில் சுற்றுலா சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி உள்ளனர். வீடு திரும்பும்போது வேன் பஞ்சரானதால், சாலையின் நடுவே அமர்ந்திருந்தபோது விபத்து ஏற்பட்டு உள்ளது.

வேனுக்கு பஞ்சர் ஓட்டிய போது ஓய்வு எடுக்க இவர்கள் சாலை ஓரம் அமர்ந்து உள்ளனர். அப்போது வேகமாக வந்த லாரி சாலை ஓரம் இருந்தவர்களை பார்க்காமல் மோதி உள்ளது.

பின்னால் வந்த லாரி வேன் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கே அமர்ந்து இருந்தவர்கள் சுதாரித்து எழுந்தரிக்கும் முன் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உள்ளது. லாரியை கண்டதும் பெண்கள், ஆண்கள் சிலர் எழுந்து ஓட முயன்று உள்ளனர்.

சிலர் விபத்தில் தப்பித்த நிலையில் மற்றவர்கள் எழுந்திரிக்கும் முன் லாரி அவர்கள் மீது மோதி உள்ளது. லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே நின்றிருந்த நிலையில் இந்த கொடூரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

Tirupathur accident causes death of 7 ladies early in the morning

விபத்தில் ஆம்பூர் ஒனாங்குட்டை பகுதியை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில், ஆம்பூர் ஓனாங்குட்டை பகுதியை சேர்ந்த பலியான எல்லோருமே பெண்கள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+