பெண்ணிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாஜக பிரமுகர்.. திருப்பத்தூரில் நடந்த திருப்பம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் பாஜகவில் நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியிருப்பது, மாவட்ட மக்களையும் அதிர வைத்து வருகிறது. உண்மையிலேயே என்ன நடந்தது? யார் இந்த பிரமுகர்?
பாலியல் புகார்களில் சிக்கி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கைதாகி வருகிறார்கள்.. திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் என அனைத்து கட்சிகளிலுமே இப்படியான புகார்கள் அவ்வப்போது வெடித்து கிளம்பி வருகின்றன.

பாஜக பிரமுகர்: இதில் பாஜகவும் விதிவிலக்கல்ல.. சில நாட்களுக்கு முன்புகூட, நெல்லையில் ஒரு புகார் கிளம்பியது.. ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.. 40 வயதாகிறது.. நெல்லை பாஜக தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார்.. இவர் சொந்தமாக வெண்டைக்காய் தோட்டம் வைத்திருக்கிறார்..
இந்த தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கும் வேலை நடக்கிறது. இதில், 35 வயது பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார்.. சம்பவத்தன்று அந்த பெண் மட்டும் தனியாக வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அங்கு வந்த செல்வகுமார், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அலறியடித்து கொண்டு போலீசுக்கு சென்று புகாரையும் தந்திருந்தார்.
செல்வக்குமார்: இதனால், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கைது செய்ய அவரது தோட்டத்துக்கு செல்வதற்குள் செல்வக்குமார் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.. ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.. இவருக்கு 47 வயதாகிறது.. பாஜவில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
பாலியல் சீண்டல்: நேற்று முன்தினம், கல்லூரி மாணவி ஒருவர், காலேஜ் முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.. இந்த பெண், ஐஸ்வரியம் கார்டன் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறாராம்... இவரிடம் சரவணன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி அங்கிருந்து தப்பி சென்று அந்த பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு தகவல் தந்துள்ளார்..
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள், பைக்கில் கிளம்பி வந்து, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை விரட்டி சென்று பிடித்து நிறுத்தியுள்ளனர்.. இதுகுறித்து அவரிடம் சரமாரியாக இளைஞர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதனால் செய்வதறியாது விழித்துள்ளார் சரவணன்..
வீடியோ பரபரப்பு: பிறகு சரவணனை, அந்த பெண்ணிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார்கள் இளைஞர்கள்.. இதையடுத்து, சரவணனும் மன்னிப்பு கேட்டுள்ளார்.. பாஜக பிரமுகர் கையெடுத்து கும்பிட்டு இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும் இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் பரவி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications