ஆடிப்போன ஆம்பூர்.. திருப்பத்தூரில் திகைத்து நின்ற வேலூர் எம்பி.. இரவில் பாடாய் படுத்திய அந்த உருவம்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ஒரே ஒரு யானை ஆம்பூரில் ஆட்டம் காட்டி வருகிறதாம்.. இந்த யானை பொதுமக்களுக்கு ஏராளமான இடையூறுகளை தந்துவருகிறது.

ஆம்பூர் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 கி.மீ. உலா வந்த ஒற்றை தந்த யானையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதிகள் இருளில் மூழ்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் மற்றும்

tirupattur Tirupattur Ambur Vellore

டஸ்கர்: ஆம்பூர் வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே, ஒற்றை தந்தத்துடன் கூடிய டஸ்கர் என்ற யானை சுற்றி திரிந்து வருகிறது... இந்த யானை சிலநாட்களுக்கு முன்பு, பனங்காட்டேரி மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியில் முகாமிட்டிருந்தது. அப்போது, வனத்துறையினர் விரைந்து வந்து, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, மறுபடியும் இந்த யானை சாணாங்குப்பம் காப்புக்காட்டை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் சுற்றித்திரிந்தது. பிறகு ஆம்பூர் அடுத்த மாதனூர் உடையராஜபாளையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் நுழைந்துவிட்டது..

பாண்டுரங்கன்: முன்னாள் அமைச்சரான பாண்டுரங்கன் நிலத்திற்குள் நுழைந்த இந்த யானை, அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. நடுரோட்டில் யானையை பார்த்த பொதுமக்கள் பதறி ஓடினார்கள்.. இரவு நேரம் என்றாலும், சிலர் பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை காட்டியும், காட்டுப்பகுதிக்கு விரட்ட முயன்றார்கள். ஆனால், அந்த யானை நெடுஞ்சாலையிலிருந்து அசரவேயில்லை..

எனவே, ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தந்தனர்.. அதற்குள் நள்ளிரவாகிவிட்டது.. அந்த யானை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றது.. வாகனங்கள் மோதி யானைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நினைத்த வனத்துறையினர், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்திவிட்டார்கள்.. அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது..

சர்வீஸ் சாலை: அந்த யானை உடையராஜபாளையத்திலிருந்து கிட்டத்தட்ட 6 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையிலும், சர்வீஸ் சாலையிலும் மாறி மாறி நடந்து சென்றுகொண்டேயிருந்தது..

அது வயதான யானை என்பதால், ஒருகட்டத்தில் மெதுவாக நடக்க துவங்கியது.. அதிகாலை 3 மணிக்கு பாலாறு பகுதிக்கு வந்து நின்றது.. ஆனால், அந்த பகுதியில் மின்விளக்குகள் எல்லாமே எரிந்து கொண்டிருந்ததால், யானை சாலையை கடந்து செல்ல ஏதுவாக மின்சப்ளை அனைத்தும் துண்டிக்கப்பட்டது... இதனால், பாலாறு பகுதியே இருளில் மூழ்கியது.

பிறகு அந்த யானை மறுபடியும் வந்த வழியே திரும்பி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. இதனால் நேற்று அதிகாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது...

மாந்தோப்பு: ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து சென்று, கீழ்முருங்கையை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது செங்கல் சூளைக்குள் யானை நுழைந்தது.. அங்கிருந்த மாந்தோப்பில் புகுந்து மரக்கிளைகளை முறித்து போட்டது.. பயிரிடப்பட்டிருந்த சப்போட்டா பழங்களையும் தின்றுவிட்டது.. அங்கு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்து முடித்து.. மிச்சமிருந்த தண்ணீரை தன்னுடைய உடல் மீது பீய்ச்சி அடித்துக்கொண்டு, அங்கேயே சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தது..

பிறகு மெல்ல கிளம்பி இன்னொரு விவசாய நிலத்திற்கு சென்று, அங்கிருந்து தனியார் ஓட்டலுக்கு பின்புறம் விவசாய நிலத்தில் முகாமிட்டது.

கதிர் ஆனந்த்: இந்நிலையில், யானை தங்கியிருந்த இடத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ், வேலூர் எம்பி கதிர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், வாணியம்பாடி கோட்டாட்சியர் அஜிதா பேகம், எம்எல்ஏ வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழுதலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் உள்ளிட்டோர் சென்று, யானையின் நடமாட்டம் குறித்தும், மறுபடியும் யானையை அடர்ந்த காப்புக்காட்டிற்கு அனுப்புவது குறித்தும் தீவிரமான ஆலோசனையை மேற்கொண்டனர்.

யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ், வேலூர் எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் வனதுறையினரை வலியுறுத்தினார்கள்..

கீழ்முருங்கை: இதுகுறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கீழ்முருங்கை பகுதியில் முகாமிட்டுள்ள யானையை, வனத்துறையினர் போலீசார் உதவியுடன், அருகில் உள்ள சாணாங்குப்பம் காப்பு காட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறார்கள்.. ஏடிஎஃப் எனப்படும் வனமோதல் தடுப்பு சிறப்பு பிரிவினர் உதவியால் யானையை காட்டுக்குள் விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார். ஒரே இரவில், ஒற்றை யானை தந்த அலப்பறையால் ஆம்பூரே அரண்டு கிடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+