திகைத்த திருப்பத்தூர்..இந்த மளிகை கடை "ஆண்ட்டி" செஞ்ச வேலைய பாருங்க..பரிதாப பிஞ்சு.. கொதித்த ஊர்ஜனம்
திருப்பத்தூர்: நளினி என்ற பெண்ணால் திருப்பத்தூர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 4ம் வகுப்பு படிக்கும் மாணவனை காணாமல், அவனது குடும்பத்தினர் பதறிப்போய் விட்டனர்.திருப்பத்தூர் அடுத்துள்ளது குரும்பேரி என்ற பகுதி.. இங்கு நளினி என்பவர் மளிகை கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்... இந்த மளிகை கடையில், மிட்டாய்களும், சாக்லேட்களும், ஸ்நேக்ஸ் ஐட்டங்களும் விற்கப்படுகின்றன.
நளினி: நளினியின் இந்த கடைக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் வந்திருக்கிறான்.. கடைக்கு வந்ததுமே 20 ரூபாய் மதிப்புள்ள சாக்லேட் எடுத்து சாப்பிட்டிருக்கிறான். இதைபார்த்து கோபப்பட்ட நளினி, அந்த சாக்லேட்டுக்கான பணத்தை கேட்டுள்ளார்.. உடனே சிறுவன், தன்னிடம் பணம் இல்லை, பணம் கொண்டு வரவில்லை, சாக்லேட்டை பார்த்ததுமே ஆசையாக இருந்தது, அதனால் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்" என்று சொல்லி உள்ளான்.

20 ரூபாய்: இதைக்கேட்டதும் நளினிக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்து. ஆத்திரமடைந்த நளினி, "உங்க வீட்டில் இருந்து யாராவது வந்து, சாக்லேட்டுக்கு காசு தந்துவிட்டு, அதுக்கப்பறம் உன்னை கூட்டிட்டு போகட்டும்.. அது வரைக்கும் இங்கேயே இரு" என்று சொல்லி, தன்னுடைய வீட்டிற்குள் இழுத்து சென்றார்..
அங்கேயிருந்த ஒரு அறையில் சிறுவனை உள்ளே வைத்து, வெளியே கதவை பூட்டிவிட்டார். இதனால் பயந்துபோன சிறுவன், "ஆண்ட்டி கதவை திறங்க" என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டான்..
இதற்கு நடுவில், தன்னுடைய மகனை காணவில்லையே என்று சிறுவனின் அம்மா தேட துவங்கினார். அதற்குள், சிறுவனின் நண்பர்கள், நளினி வீட்டில் சிறுவனை பூட்டி வைத்திருக்கும் தகவலை சொன்னார்கள். இதைக்கேட்டு, வெகுண்டெழுந்த சிறுவனின் குடும்பத்தாரும், கிராம மக்களும் நளினியின் கடை முன்பு ஒன்றுதிரண்டுவிட்டார்கள்.
பரபரப்பு: குழந்தையை எப்படி ரூமுக்குள் பூட்டி வைக்கலாம்? 20 ரூபாய்க்கு சிறைப்பிடிப்பதா? என்று சிறுவனின் தாய் நளினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. சிறுவன் அறியாமல் செய்ததாகவும், அதற்காக அறையில் பூட்டி வைத்துது தவறு என்று மொத்த ஊரும் நளினியிடம் சொன்னது.. இதற்கு பிறகு, வேறுவழியின்றி நளினி, தன்னுடைய வீட்டிலிருந்து சிறுவனை விடுவித்தார். இந்த சம்பவத்தினால், அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications