திருப்பத்தூர் ஓட்டலில் பெண்ணுடன்.. ஏடாகூடமாக சிக்கிய ஏட்டு.. இதெல்லாம் தேவையா மிஸ்டர் நாராயணசாமி?

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஓட்டலில் நடந்த சம்பவத்தை பார்த்து, காவல்துறையே அரண்டுபோய் கிடக்கிறது.. அப்படி என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி.. 51 வயதாகிறது.. இவர், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், ஏட்டாக வேலைபார்த்து வருகிறார். அதாவது, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

Tirupattur Woman and why did Tirupathur Police take action against Policeman what happened actually

அட்வைஸ்: இதே எஸ்பி ஆபீசில், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் பணிபுரிந்து வருகிறார்.. இந்த பெண் அதிகாரியை சந்திப்பதற்காக, அவரது உறவுக்கார பெண் ஒருவர் அடிக்கடி வந்துபோவாராம்.. இந்த பெண்ணுக்கு கல்யாணமாகிவிட்டது. நாட்றம்பள்ளியை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறதாம்.

பெண் இன்ஸ்பெக்டரை சந்திக்க வரும்போதெல்லாம், ஏட்டு நாராயணசாமிக்கும் இப்பெண் அறிமுகமாகி உள்ளார்.. இதனால், இருவருமே நன்றாக நட்பு ரீதியாக பழகி வந்துள்ளனர்..

திருப்பத்தூர்: ஒருகட்டத்தில், அந்த பெண்ணை போலீசில் சேரும்படி நாராயணசாமி அட்வைஸ் தந்துள்ளார்.. அத்துடன், ஒருபடிமேலேபோய், இதற்காகவே, திருப்பத்தூரில் உள்ள தனியார் போலீஸ் பயிற்சி வகுப்பிலும் அந்த பெண்ணை கொண்டுபோய் சேர்த்து விட்டுள்ளார்.

இதைத்தவிர, அந்த பெண்ணை அடிக்கடி சென்று பார்த்து வருவாராம் நாராயணசாமி. அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூருக்கு சென்று, அப்பெண்ணை சந்தித்து பேசியிருக்கிறார் நாராயணாசாமி. பிறகு, அங்கிருந்த ஒரு ஓட்டலுக்கு அவரை அழைத்து சென்று சாப்பிட வைத்துள்ளார்.. சாப்பிடும் நேரத்தில், அப்பெண்ணுக்கு, நாராயணசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி: இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், திருப்பத்தூர் மகளிர் போலீசுக்கே போய்விட்டாராம்.. நாராயணசாமி மீது புகாரையும் தந்திருக்கிறார்.. இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த செய்த போலீசார், ஏட்டு நாராயணசாமியை கைது செய்துள்ளனர்.. இதுதொடர்பாக துறைவாரியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு, ஏட்டு நாராயணசாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த பெண்ணை போலீஸில் சேர்த்து, நாராயணசாமியின் போலீஸ் வேலைக்கு சிக்கல்வந்துள்ளது.. இதெல்லாம் தேவையா ஏட்டு சார்??

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+