சிறுதாவூர் பங்களாவில் பணம் பதுக்கியதாகப் பேசிய வைகோ... அதிமுக புகார்.. வழக்குப் பதிவு!
சென்னை: தமி்ழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தூர், நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசிய வைகோ, முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி தங்குகின்ற சிறுதாவூர் பங்களாவிற்கு மிகப் பெரிய கண்டெய்னர் ஒன்று லாரியில் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறினார். அதில் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரூ.1000 மற்றும் ரூ. 500 அடங்கிய நோட்டுக் கட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு அந்தக் கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

தார்பாலின் உறையைப் போட்டு மூடிய நிலையில் பத்து லாரிகள் 28ஆம் தேதி காலை சிறுதாவூர் பங்களாவுக்குள் சென்றதாகவும், லஞ்ச ஊழலில் சேர்க்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் உறுதியாக நம்புவதாக குற்றம் சாட்டிய வைகோ, இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதினார்.
உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் சிறுதாவூர் பங்களா வளாகத்திற்குள்ளாக மூடி மறைக்கப்பட்ட நிலவறைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சட்ட விரோதமாக லஞ்ச லாவண்யத்தில் பெற்ற பணம் பதுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வருவதால், சிறுதாவூர் பங்களாவில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வைகோ மீது போலீசில் புகார் கூறினார். புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார் வைகோ மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications