புது ஸ்டைலில் ஆண்களிடம் குழந்தைகளை கொடுத்து பேருந்தில் திருட்டு – 2 பெண்கள் கைது!
திருப்பூர்: திருப்பூர் பேருந்தில் ஆண்களிடம் குழந்தைகளைக் கொடுத்து பயணிகளிடம் பணம் மற்றும் நகைகளைத் திருடிய இரண்டு பெண்கள் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் திருப்பூரில் மாநகர் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் நகைகள், பணம் திருடு போகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன.
இதையடுத்து, நகரப்பேருந்துகளிலும், புறநகர் பேருந்துகளிலும் போலீசார் சாதாரண உடைகளில் பயணம் செய்தபடி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு பெண்கள்:
இந்நிலையில் திருப்பூர் புஷ்பா திரையரங்கம் பகுதியில் திங்கள்கிழமை கைக்குழந்தையுடன் நகரப் பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள் உட்காந்திருந்த ஒரு பயணியிடம் குழந்தையை கொடுத்து அவர் கவனத்தை திசை திருப்பினர்.
போலீசார் கைது:
பின்னர், அவர் வைத்திருந்த பையில் இருந்து பணத்தை திருட முயன்றபோது அந்த பெண்கள் இருவரையும் போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர்கள்:
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம், வண்டிப்பே ட்டையை சேர்ந்த அருணா, கெளசல்யா எனத் தெரியவந்தது.
பேருந்தில் திருட்டு வேலை:
அவர்கள் கடந்த சில மாதங்களாக திருப்பூரில் தங்கி, பேருந்துகளில் பயணிகளிடம் நகைகள், பணத்தை திருடி வந்ததாக விசாரணையில் கூறியுள்ளனர்.
10 லட்சம் கொள்ளை:
இவர்கள் இருவரும் இதுவரை பேருந்துகளில் பயணித்து பயணிகளிடம் இருந்து மொத்தம் ரூபாய் 10 லட்சம் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகைகளை திருடியுள்ளனர்.
கொள்ளை பற்றி விசாரணை:
போலீசார் அந்த இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications