ஆந்திரா மழையால் திருவள்ளூர் ஆரணி ஆற்றில் வெள்ளம் - அபாய எச்சரிக்கை
திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவள்ளூர் ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர் மழையால் திருவள்ளூர் மாவட்டமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் குடியிருப்புகள், சாலைகளில் தேங்குகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையினால் பிச்சாட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் பிச்சாட்டூர் அணையிலிருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆரணியாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆரணி ஆற்றுக்கரையோரத்தில் உள்ள குமரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் தடுப் பணையின் ஷட்டர் சற்று விலகிய தால், மழைநீர் பெருக் கெடுத்து ஓடியதால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications