7 மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்த டீசர் டேங்கர் ரயில்.. முழுமையாக அணைக்கப்பட்டது. 18 டேங்கர்கள் நாசம்
திருவள்ளூர்: டீசல் டேங்கர் ரெயிலில் ஏற்பட்ட தீ 7 மணி நேரமாக எரிந்து வந்த நிலையில், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
52 பெட்டிகள் கொண்ட ரெயிலில் 18 டேங்கர்கள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன. டீசல் பற்றி எரிவதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும் மதியம் 1 மணிக்குள்ளாக தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே டீசல் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கிச் சென்ற சரக்கு ரயில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தடம் புரண்டது. இதனால் என்ஜினுக்கு அடுத்ததாக உள்ள பெட்டிகள் தீப்பிடித்தன. கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளித்து வருகிறது. ர
52 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயிலில் இதுவரை 18 டேங்கர்கள் தீயில் முழுமையாக சேதமடைந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து மின்சார மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயணம் செய்வதற்கு வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தீ விபத்தை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சரக்கு ரெயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தீ விபத்து நடந்த இடத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் நாசர் பேசுகையில், "இன்று அதிகாலை இந்த கோர தீ விபத்து நடந்துள்ளது. இதனையறிந்து முதல்வரின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஒன்றாக இணைந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.
இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி சமூக நலக் கூடத்தில் தங்க வைத்துள்ளோம். எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பொதுமக்கள் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விடுப்பில் சென்ற மருத்துவர்களையும் பணிக்கு வரச்சொல்லி அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தீயணைப்பு படையினர் புயல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டீசல் பற்றி எரிவதால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. மதியம் 1 மணிக்குள் தீ முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், 1 மணியளவில் முழுமையாக தீ அணைக்கப்பட்டுள்ளது. 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. அவை மொத்தமாக ரூ.12 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படும் நிலையில், மொத்தமாக எரிந்து நாசமாகியுள்ளது.
-
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications