கருணாநிதி 2 நாட்களுக்கு மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்- டிகேஎஸ் இளங்கோவன்
கருணாநிதி இருநாட்களுக்கு மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை: கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இரு நாட்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
கருணாநிதிக்கு கடந்த 24-ஆம் தேதி முதல் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காய்ச்சல் மற்றும் நோய் தொற்று குறைந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. பின்னர் அவர் வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து காவேரி மருத்துவமனையில் தொண்டர்கள் சூழ்ந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார்.
அவருக்கு ரத்த அழுத்தம் சீராகிவிட்டது. கருணாநிதி இன்னும் இரு நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். அதன் பின்னர் வீடு திரும்புவார் என்றார் டிகேஎஸ் இளங்கோவன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications