தேர்தலுக்குள் தமாகா என்ற கட்சியே காணாமல் போய்விடும்: ஈ.வி.கே.எஸ்.
சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே காணாமல் போய்விடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆகியோர் தமாகாவில் இருந்து விலகினர். பீட்டர் அல்போன்ஸ் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஜெயலலிதாவை நேற்று போயஸ்கார்டனில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தமாகாவைச் சேர்ந்த பலர் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறுகையில், தமாகாவில் மீதமுள்ளவர்களும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி தலைமையே ஏற்று விரைவில் காங்கிரஸில் இணைவர். தேர்தலுக்குள் தமாகா என்ற கட்சியே காணாமல் போய்விடும்.
கரூரில் கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் கோடிக் கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து உள்ளனர். எந்த தேர்தலிலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.500 கோடிக்கு பணம் பதுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூரில் திங்கள்கிழமை பிரசாரம் செய்கிறார். அதில் நானும் கலந்து கொள்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 26 அல்லது 27-ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications