பெரும்பான்மையான காங். கட்சியின் மொத்த உருவமே தமிழ் மாநில காங்கிரஸ்: வாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் என்பது பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சியின் மொத்த உருவம் எனத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். மேலும், தொண்டர்களின் கருத்தை அறிந்து கூட்டணி குறித்து முடிவு செய்யப் படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை துவக்கியுள்ளார். இந்நிலையில், நேற்று கோவை வந்திருந்த வாசனுக்கு, விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

TMK is a design from congress, says Vasan'

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் வாசன். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டம், திருச்சியில் திருப்பு முனை கூட்டமாக மட்டுமல்லாமல் வெற்றி கூட்டமாக அமைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என எல்லா தரப்பினரும் எங்களை ஆர்வத்துடன் அணுகி வருகின்றனர்.

கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து, முன்னணி தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் உறுப்பினர் சேர்க்கை துவங்கும். தமிழகத்துக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் வகையில், இந்த உறுப்பினர் சேர்க்கை அமையும். அனைத்து தரப்பினரும் இருக்கும் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமையும்.

தமிழக சட்டசபையைப் பொறுத்த வரை மக்கள் பிரச்னையை ஆக்கப்ப்பூர்வமான முறையில் விவாதித்து, நல்ல நிலையை ஏற்படுத்திட வேண்டும். எதிர்கட்சிகளுக்கு உரிய நேரத்தை ஒதுக்கி மீனவர் பிரச்னை, காவேரி, முல்லை பெரியாறு மற்றும் மீனவர் பிரச்னை போன்றவற்றில் எதிர்கட்சிகளின் கருத்தை கேட்கக்கூடிய நல்ல நிலையை ஏற்படுத்திட வேண்டும். 3 நாட்கள் சட்டமன்றம் என்பது நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். த.மா.கா.வும் அதைத்தான் வலுவாக வலியுறுத்துகிறது.

கர்நாடகா அரசு அணை கட்டுவதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் வரும் 8ஆம் தேதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், டெல்டா பகுதி விவசாயிகளுக்காக திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு வாசன் அளித்த பதில்களாவது:-

அரசியலில் தற்போது தடித்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது குறித்து தங்கள் கருத்து?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை வரும் காலங்களில் புதிய கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்படும். பொதுவாக அரசியல் கட்சிகள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எல்லாம் கடந்து மக்கள் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும்

தமிழ் மாநில காங்கிரஸ் உருவானதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகாது என தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளாரே?

எங்களுடைய முதல் வெற்றி திருச்சியில் நடந்த கூட்டம். தமிழக அரசியலில் எங்களின் திருச்சி கூட்டம், திருப்பு முனை கூட்டமாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் முதல் இயக்கமாக தமிழ் மாநில காங்கிரசை வளர்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டே உள்ள நிலையில், அதற்குள் எப்படி உங்களை தயார் படுத்தப்போகிறீர்கள்?

தமிழ் மாநில காங்கிரஸ் என்பது பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சியின் மொத்த வடிவம். மேலும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தலைவர்களும், தொண்டர்களும் குக்கிராமம் முதல், நகரம் வரை சென்று மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறும் இயக்கமாக செயல்படுவார்கள். அதன் அடிப்படையில் மக்கள் நம்பிக்கையை பெற்று பலமான இயக்கமாக மாறும் என நம்புகிறோம்.

தேர்தலில் கூட்டணி அமைப்பீர்களா?

தமிழ்மாநில காங்கிரஸ் தேர்தலுக்கு முன் முதல் இயக்கமாக தமிழகத்தில் வர வேண்டும் என்பது தான் தலைவர்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். அதை நோக்கி தான் எங்கள் பயணம் அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+