திருவள்ளூரில்.. முதல் 3 இடமும் தனியார் பள்ளிகளுக்கே!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களைக் காண முடிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் மூன்று இடத்தையும் தனியார் பள்ளி மாணவர்களே பிடித்துள்ளனர்.
இந்த முறையும் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.6 சதவீதம் ஆகும்.
நான்கு மாணவிகள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழில் முதலிடம்...
அவர்களின் பெயர் விபரமாவது :
நிவேதா, ஸ்ரீசவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - கோவை
ஆர்த்தி, கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி - நாமக்கல்
சுகன்யா, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி - கிருஷ்ணகிரி
லாவன்யா, சயான் மெட்ரிக் பள்ளி - காஞ்சிபுரம்

வேளாண் செயல்முறை...
இதேபோல், பிளஸ்-2 தேர்வில் வேளாண் செயல்முறை பாடத்தில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் அந்தியூர் பள்ளி மாணவன் பாரதிதாசன் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் மங்களம் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆவார். ‘எதிர்காலத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் சார்ந்த படிப்புகளை தேர்தெடுத்து படிக்கவே விரும்புவதாக' பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

இது தூத்துக்குடி நிலவரம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 651 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 766 பேர் தேர்ச்சி பெற்று, 95.5 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவு ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி 95.72 சதவீதம் ஆகும்.

முதல் 3 இடங்களும் மாணவிகளே...
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொது தேர்வை 32 ஆயிரத்து 476 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 30 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.36 சதவீதம் ஆகும். திருச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 14 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளி மாணவர்கள்...
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications