தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- live
-தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் பெரிய அளவில் வன்முறையில்லை-லக்கானி
-ராமநாதபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்-லக்கானி
-3 மணிக்கு மேல் வாக்குப்பதிவு மிக மந்தமாகிவிட்டது- லக்கானி
-பெண்ணாகரம், எடப்பாடியில் மிக அதிகபட்சமாக 85 சதவீத வாக்குப் பதிவு
-சென்னை துறைமுகத்தில் 53%, வில்லிவாக்கத்தில் 50% வாக்குப் பதிவு
-சென்னை நகரில் மிகக் குறைவான வாக்குப் பதிவு
-தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 69.19% வாக்குப் பதிவு
-தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
-6 மணிக்கு முன்பாக வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்தவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்
-தமிழகத்தில் 232 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது
-காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது
-டோக்கன் வழங்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்
-மழையால் பாதிக்கப்பட்ட வாக்குப்பதிவு மாலையில் விறுவிறுப்படைந்தது
-அதிக அளவாக தருமபுரியில் வாக்குகள் பதிவானதாக ராஜேஷ் லக்கானி தகவல்

-நாகை மாவட்டத்தில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக ராஜேஷ் லக்கானி தகவல்
-புதுச்சேரியில் மாலை 4 மணி வரை 71.6 சதவீத வாக்குப் பதிவு
-தி.நகர் இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் நடிகர் சிலம்பரசன் வாக்களித்தார்
-தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது- லக்கானி
-தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்குகள் பதிவு
-புதுவையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 66.55% வாக்குகள் பதிவு
-3 மணி நிலவரப்படி கடலூரில் 54.74% வாக்குப்பதிவு
-திருவாரூர் மாவட்டத்தில் 62.73% வாக்குகள் பதிவாகியுள்ளன
-பிற்பகல் 3 மணி நிலவரம்: அரியலூர் 70%; திருவாரூர் 63%; கடலூர் 54.74%; சிவகங்கை 58.06%;
-சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் வடிவேலு தனது வாக்கினைப் பதிவு செய்தார்
-உடுமலை அருகே தேர்தல் பணியில் இருந்த பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
-காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலர் செல்வராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டது
-கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வராஜ் மரணமடைந்தார்
-மாற்று அதிகாரி மூலம் தொடர்ந்து அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
-அருப்புக்கோட்டையில் வாக்களிக்க வந்த மூதாட்டி வழுக்கி விழுந்து மரணம்
-காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுப்பெறுகிறது
-அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை
-காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து வட மேற்கில் நகர்ந்து வருகிறது
-தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை
-வட மற்றும் மத்திய தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும்
-20ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் அறிவிப்பு
-6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வந்தால் டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படும்-லக்கானி
-மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமா என 3 மணிக்கு மேல் முடிவு-லக்கானி
-தமிழகத்தில் பெரிய அளவில் தேர்தல் வன்முறை இல்லை-ராஜேஷ் லக்கானி பேட்டி
-சென்னையில் வாக்குப்பதிவு மிகவும் அதிகமாக உள்ளது-லக்கானி
-தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
-புதுச்சேரியில் மீண்டும் வாக்குப் பதிவு விறுவிறுப்படைந்தது
-பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50 சதவீத வாக்குகள் பதிவானது
-காலையில் தொடங்கிய வாக்குப் பதிவி இடையில் மழையால் தொய்வடைந்தது
-மதுரை சிம்மக்கல்லில் ஓட்டு போட வந்த முதியவர் மரணம்
-காரைக்குடி அருகே கோட்டூரில் வாக்குச்சாவடியின் மேற்கூரை இடிந்து விழுந்து 4பேர் காயம்
-கன்னியாகுமரி 28%; ராமநாதபுரம் 36% வாக்குகள் பதிவாகியுள்ளது
-1 மணி நிலவரப்படி திருவாரூர் 42% வாக்குப்பதிவு
-ஈரோடு மாவட்டத்தில் 48% வாக்குகள் பதிவாகியுள்ளது
-சென்னை புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் நடிகை திரிஷா வாக்களித்தார்
-திருச்சி மினிக்கியூரில் வாக்குப்பதிவு 3 மணி நேரம் நீட்டிப்பு
-இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் இடையூறு
-இதனால் அங்கு வாக்குப்பதிவு நேரம் இரவு 9 மணி வரை நீட்டிப்பு
-பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க ஆலோசனை
-வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கலாமா என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை- ராஜேஷ் லக்கானி
-மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை
-நாமக்கல் 33.97%; காஞ்சிபுரம்- 21%; திருப்பூர்- 36.65%; சிவகங்கை 20.50%; கிருஷ்ணகிரி 32%
-புதுக்கோட்டை- 19%; அரியலூர் 30.50%; திண்டுக்கல் 21.59%; சேலம்- 31.54%
-திருச்சி- 27%; மதுரை- 28.05%; தஞ்சை- 30%; நெலலி- 28.90%; சென்னை-25%
-தமிழகத்தில் காலை 11 மணிநிலவரப்படி 25.2% வாக்குகள்- ராஜேஷ் லக்கானி
-சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி பேட்டி
-கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 20% வாக்கு பதிவு
-சேலம், நாமக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 30%க்கும் மேல் பதிவு
-திண்டுக்கல், மதுரை, திருச்சி, நாகையில் கனமழை- வாக்கு பதிவு சதவீதம் குறைவு
-காலை 11 மணிநிலவரப்படி கேரளாவில் 28.46% வாக்குப் பதிவு
-காலை 11 மணிவரை நாகை- 23%; புதுக்கோட்டை 19% வாக்கு பதிவு
-காலை 11 மணிவரை அரியலூர் மாவட்டத்தில் 30.50% வாக்குகள் பதிவு
-சென்னை அண்ணா நகரில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வாக்களித்தார்
-நீலகிரி மாவட்டத்தில் காலை 11 மணிவரை 33.59% வாக்குகள் பதிவு; புதுக்கோட்டை- 19 %
-ஈரோடு 11 மணி நிலவரப்படி 34.50% வாக்குகள் பதிவு
-காலை 11 மணி நிலவரம்: கடலூர் -27% திருவாரூர் 16% கோவை- 16%; ஈரோடு 34.5%; சென்னை 25%;
-11 மணி நிலவரப்படி திருவாரூர் மாவட்டம் 16% வாக்குப்பதிவு
-கடலூர் மாவட்டத்தில் 27% வாக்குகள் பதிவாகியுள்ளது.
-காலை 11 மணி வரை புதுச்சேரியில் 27.5% சதவீத வாக்குகள் பதிவு
-திருத்தணி அருகே மங்காபுரம் காலணி மக்களும் தேர்தல் புறக்கணிப்பு
-தனிவாக்குச்சாவடி அமைக்கக் கோரி 714 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பு
-தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்கள் மநகூ அணியை ஆதரிக்கிறார்கள்- திருமாவளவன்
-தமிழகத்தில் தேமுதிக, மநகூ ஆட்சியைக் கைப்பற்றும்
-தமிழகத்தில் அரை நூற்றாண்டு அரசியல் அடியோடு மாற்றப்படும்- திருமாவளவன்
-தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் ஒரு பயனும் இல்லை
-அதிமுக, திமுக பணம் கொடுத்து மக்களை களங்கப்படுத்திவிட்டனர்- திருமாவளவன்
-ராமநாதபுரம் கமுதி முதல்நாடு 46-வது வாக்குச் சாவடியில் மோதல்
-இருதரப்பு மோதலைத் தொடர்ந்து போலீசார் தடியடி
-நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார்
-அரியலூரில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
-வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது மின்னல்தாக்கி மரணம்
-நெல்லை மாவட்டத்தில் பலத்த சூறவாளி காற்றுடன் மழை கொட்டுகிறது
-பலத்த மழையிலும் குடையுடன் வந்து வாக்காளர்கள் வாக்களிப்பு
-10 மணி நிலவரப்படி சென்னையில் 20% வாக்குகள் பதிவு
-திருச்சியில் 22.40% வாக்குகள் பதிவு
-சென்னையில் பல இடங்களில் மழை
-தூறல் முதல் மிதமான மழை பெய்கிறது
-மழை காரணமாக வாக்குச்சாவடிகளுக்கு வருவோர் பாதிப்பு
-வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது
-தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெல்லும்- கனிமொழி
-ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது: கனிமொழி பேட்டி
-2 நாட்கள் பொறுத்தால் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரியும்- ஜெ. பேட்டி
-சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் வாக்களித்த பின்னர் ஜெயலலிதா பேட்டி
-சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெ. வாக்களித்தார்
-ஜெயலலிதாவுடன் தோழி சசிகலாவும் வாக்களித்தார்
-அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தலுக்குப் அனைத்து தொகுதி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்- திருமாவளவன்
-அரியலூர் அங்கனூரில் வாக்களித்த பின்னர் திருமாவளவன் பேட்டி
-ஒட்டன்சத்திரம் தொகுதியிலும் திமுக- அதிமுகவினரிடையே மோதல்- 7 பேர் மண்டை உடைப்பு
-சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை அமைக்கும்: அன்புமணி
-திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அன்புமணி பேட்டி
-தஞ்சாவூர் மாவட்டத்தில் 9%; கிருஷ்ணகிரியில் 15% ; சேலத்தில் 12% வாக்குகள் பதிவு
-திருச்சி மாவட்டத்தில் 14.40% வாக்குகள் பதிவு
-திண்டிவனத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்களித்தார்
-பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தார்
-திராவிட கட்சிகள் இலவசம், மது கொடுத்து தமிழகத்தை சின்னாபின்னமாக்கிவிட்டன- டாக்டர் ராமதாஸ்
-வளர்ச்சி, முன்னேற்றத்தை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் ஓராண்டாக பிரசாரம்-
-இளைஞர்கள், நடுநிலையாளர்கள் ஒட்டுமொத்தமாக முதன் முதலாக வாக்களிக்க முன்வந்துள்ளனர்-
-தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் வல்லமை அன்புமணிக்கு உண்டு என பெண்கள் நம்புகின்றனர்- டாக்டர் ராமதாஸ்
-சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார்
-ஈரோடு மாவட்டத்தில் 18% வாக்குகள் பதிவு
-தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்க வருகை
-காஞ்சிபுரம் மாவட்டம்- 11%; விருதுநகர் மாவட்டம்- 12% வாக்குகள் பதிவு
-நெல்லை 10%; திருவள்ளூர் 9.9% வாக்குகள் பதிவு
-புதுச்சேரியில் 9 மணி வரை 11% வாக்குப் பதிவு
-போடியில் வாக்குச்சாவடியை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினர்
-வாக்குப்பதிவு எந்திரங்களை அதிமுகவினர் முன்பு திறந்ததை கண்டித்து போராட்டம்
-வாக்குச்சாவடி முகவருக்கு பதில் ஆளுங்கட்சியினர் முன்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறப்பு
-ஜெ. மீண்டும் முதல்வராவார்- ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை
-சென்னை மாவட்டம் -13%; திருவாரூர்- 5% வாக்குப் பதிவு
-தமிழகத்தில் காலை 9 மணி வரை 19 சதவீத வாக்குப் பதிவு
-புதுவையில் காலை 9 மணிவரை 10.34% வாக்குகள் பதிவு
-கோவை மாவட்டத்தில் 5.7% வாக்குகள் பதிவு
-கேரளாவில் 13.5% வாக்குப் பதிவு
-கடலூர் மாவட்டத்தில் 15%; ராமநாதபுரம் மாவட்டத்தில் 3% வாக்குகள் பதிவு
-தமிழகத்தில் காலை 9 மணிநிலவரப்படி 18.3% வாக்குகள் பதிவு
-ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவர்ப்படி 3% வாக்கு
-சென்னை அண்ணாநகரில் இ.கம்யூ மூத்த தலைவர் தா. பாண்டியன் வாக்களித்தார்
-தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தா. பாண்டியன்
-மக்களுக்கு பல தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்- தா. பாண்டியன்
-திருவண்ணாமலை சேப்பாபட்டில் திமுக- அதிமுகவினர் இடையே மோதல்- 3 பேர் மண்டை உடைந்தது
-தமிழகம், புதுவை, கேரளா வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
-கிருஷ்ணகிரி சிந்தகம்பள்ளியில் லோக்சபா துணைசபாநாயகர் தம்பித்துரை வாக்களித்தார்
-ராமநாதபுரம், நாகையில் மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஒளியில் வாக்குப் பதிவு
-கூடலூர், பந்தலூரிலும் மின்சாரம் இல்லாத நிலையில் வாக்குப் பதிவு
-ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்
-234 தொகுதிகளிலும் திமுக வெல்லும்- மு.க.ஸ்டாலின்
-வேட்பாளர் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்- நடிகர் பார்த்திபன்
-வேட்பாளர் பற்றி திருப்தி இல்லாமல் போனால் 'நோட்டாவுக்கு' ஓட்டு போடுங்கள்- நடிகர் பார்த்திபன்
-நிறைய இளைஞர்கள் 'நோட்டாவுக்கு' போட தயாராக உள்ளனர்- நடிகர் பார்த்திபன்
-நோட்டாவுக்கு அடுத்த தேர்தலில் பவர் கிடைக்கும்- நடிகர் பார்திபன்
-சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
-மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
-தோல்வி பயத்தால் அதிமுக பணம்பட்டுவாடா செய்தது- குஷ்பு பேட்டி
-பறிமுதல் செய்யப்பட்ட 99% பணம் அதிமுகவினருடையது- நடிகை குஷ்பு
-அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்- நடிகை குஷ்பு
-சென்னை மந்தைவெளியில் வாக்களித்த பின்னர் குஷ்பு பேட்டி
-திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
-மனைவி துர்கா உடன் வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்
-சென்னை மந்தவெளியில் நடிகை குஷ்பு வாக்களித்தார்
-கோவை வடக்கு தொகுதியில் 147-வது வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தம்
-வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பதிவாகவில்லை என்பதால் வாக்குப் பதிவு நிறுத்தம்
-மாற்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தற்போது வாக்குப் பதிவு மீண்டும் தொடங்கியது
-சென்னை அடையாறில் முன்னாள் காங். கமிட்டி தலைவர் தங்கபாலு வாக்களித்தார்
-சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்களிக்கிறார்
- சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விவேக் வாக்களித்தார்
-பண்ருட்டி மேல்குமாரமங்கலத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்களித்தார்
-திண்டுக்கல் வேடசந்தூர் 166; தூத்துக்குடி 245-வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அசுதோஷ் சுக்லா முகப்பேரில் வாக்களித்தார்
-திருத்துறைப்பூண்டி அருகே வேலூரில் இ.கம்யூனிஸ்ட் செயலர் முத்தரசன் வாக்களித்தார்
-ஈரோட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் வாக்களித்தார்
-அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப் பட்டுவாடா செய்துள்ளது என இளங்கோவன் புகார்
-நாமக்கல் சின்னாகவுண்டம்பாளையத்திலும் வாக்கு எந்திரம் பழுது
-மதுரையில் கொட்டும் மழையுடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது
-திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை பெய்வதால் வாக்குப்பதிவு மந்தம்
-சென்னை ஆதம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வாக்களித்தார்
-பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்
-அரவக்குறிச்சி, தஞ்சையில் மே 19-க்கு முன்னரே தேர்தல் நடத்த வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன்
-நடிகர் கமல்ஹாசன், மகள் அக்ஷரா, நடிகை கெளதமியுடன் வாக்களித்தார்
-ராசிபுரம் கூனவேனல்பட்டி வாக்குச் சாவடியிலும் வாக்கு எந்திரம் பழுது
-ஈரோடு மணியக்காரன்புதூரிலும் வாக்குப் பதிவு எந்திரம் பழுது
-தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது- கருணாநிதி
-திருவாரூர் தொகுதி புதூரில் வாக்கு எந்திரம் பழுதால் வாக்குப் பதிவு தொடங்கவில்லை
சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் வாக்களிப்பு
-திருவள்ளூர்: திருத்தணி மிட்டாகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்
-அடிப்படை வசதிகள் செய்துதராததைக் கண்டித்து மிட்டா கண்டிகை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
-சென்னை ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் நடிகர் கமல்ஹாசனும் வாக்களித்தார்
-பிற்பகல் 3.30 மணிக்கு மேல் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் வாக்குப் பதிவு விவரம் அறிவிக்கப்படும்
-காஞ்சி திருக்கால்மேட்டில் வாக்குச் சாவடியில் வாக்கு எந்திரம் பழுது
-விருதாசலம் விஜயமாநகரில் வாக்கு எந்திரம் பழுது
-நாமக்கல் ஆலம்பாளையத்தில் எந்திரம் பழுது
-ஆரணியில் எந்திரம் பழுது
-ஊத்தரங்கரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-சங்கரன்கோவில் தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியில் எந்திரம் பழுது
-கடலூர் கந்தசாமிநாயுடு கல்லூரியில் வாக்கு எந்திரம் பழுது
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் மாற்று எந்திரங்கள் பொறுத்தம்
-வாக்கு எந்திரங்கள் பழுதான இடங்களில் வாக்குப் பதிவு துவங்குவதில் தாமதம்
-சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார்
-சட்டசபை தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது- சீமான் பேட்டி
-பணப்பட்டுவாடாவை தடுக்காத தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது- ப.சிதம்பரம்
-திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது- கருணாநிதி
-தேர்தல் ஆணையம் ஒருசில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது- கருணாநிதி
-திண்டுக்கல் பேகம்பூரில் 2 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்புடன் வாக்குப் பதிவு
-ஓசூர், காஞ்சிபுரம், கோவையிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுது
-திண்டுக்கல், கடலூர், பொள்ளாச்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது
-சென்னை கோபாலபுரம் சாரதா நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் கருணாநிதி வாக்களித்தார்
-ஆம்பூர், ஊத்தங்கரையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுது- வாக்காளர்கள் காத்திருப்பு
-சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்
-சென்னை கோபாலபுரம் வாக்குச் சாவடியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருகை
-போயஸ் கார்டன் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ரஜினிகாந்த்
-ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு காலையிலேயே வந்த ரஜினி
-வாக்குப்பதிவு துவங்கிய கையோடு வாக்களித்த ரஜினி
-வாக்களிக்க வருவதாக மேலாளர் மூலம் சொல்லி அனுப்பியுள்ளார் கமல்
-2 மணிநேரத்துக்கு ஒருமுறை வாக்குப் பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்- லக்கானி
-சென்னை அரும்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
-சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் நடிகர் ரஜினி வாக்களித்தார்
-சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்
அடையாறு வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்களித்தனர் அஜீத், ஷாலினி
சென்னை அரும்பாக்கத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி வாக்களித்தார்
சென்னை திருவான்மியூர் வாக்குச் சாவடியில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி வாக்களித்தனர்












Click it and Unblock the Notifications