சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு இரங்கல்… டிச. 5 ஒரு கறுப்பு தினம்… ஓபிஎஸ் உருக்கம்

இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார்.

புத்தாண்டில் முதன் முறையாக நேற்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. மீண்டும் இன்று கூடிய சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

TN Assembly passed resolution Jayalalitha’s death

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டிசம்பர் 5ம் தேதி ஒரு கறுப்பு நாள் என்று உருக்கமாக பேசினார். தமிழகத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ஜெயலலிதா என்றும் அவர் மறைந்தாலும் தங்களின் இதயங்களில் இருந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் ஓபிஎஸ் உணர்வு பூர்மாக பேசினார்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் அன்பை பெற்றவர் ஜெயலலிதா என்றும், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டிய ஓபிஎஸ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+