தமிழக சட்டசபை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு - பந்த் காரணமா?
சென்னை: தமிழக சட்டசபையின் நாளைய கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து விவசாயிகள் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ள நிலையில் நாளைய சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே அணைக் கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக, பாமக, கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தன.

ஆனால் அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சபை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த சட்டசபை கூட்டத் தொடர் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்
மேலும் நாளை நடைபெறுவதாக இருந்த அலுவல்கள் மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் எனவும், 30 ஆம் தேதி நடைபெறும் அலுவல்கள் 31 ஆம் தேதியும், 31 ஆம் தேதி நடைபெறும் அலுவல்கள் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications