வரும் ஜூன் 16-ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது
சென்னை: தமிழக சட்டசபை ஜூன் 16-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து நேற்று மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது, சபாநாயகராக தனபாலும், துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து சபாநாயகராக பொறுப்பேற்ற தனபால், சட்டப்பேரவையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், 15-வது சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் ஜூன் 16-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்த உள்ளதாகவும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications