தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.20 வரை நடைபெறும்: சபாநாயகர் தனபால்
சென்னை: தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 20-ந் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதுதான் ஆளும் அதிமுக அரசின் இறுதி சட்டசபை கூட்டத் தொடர்.

இன்றைய கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இருப்பினும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. இதன் பின்னர் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி விவாதித்தது.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், வரும் 20-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். நாளை காலை 10 மணிக்கு சபை கூடியதும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதன் பின்னர் பொதுவிவாதம் நடைபெறும்.
சபை நடைபெறும் 4 நாட்களும் கேள்வி பதில் இடம்பெறும். பட்ஜெட் மீதான நிதி அமைச்சரின் பதில் உரை வரு 20-ந் தேதி இடம்பெறும் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications