5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி; புதிய அறிவிப்புகள் இல்லை: ஓ.பன்னீர் செல்வம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8.01 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
2016-2017-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் புதிய அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாது என்றும் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஒ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார்
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி சாதனை படைத்தது.
- 5 ஆண்டுகளில் அமைதியை நிலைநாட்டி வளர்ச்சிக்கு வித்திட்டது அஇஅதிமுக அரசு.
- உணவு பாதுகாப்பில் உறுதி செய்ய திட்டங்கள். உணவு பாதுகாப்பை உறுதி செய்ய விலையில்லா அரிசி.
- விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட திட்டங்கள்.
- மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டிகள்.
- ஈழத்தில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை- ஓபிஎஸ்
- மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை விலையில்லா புத்தகங்கள்.
- மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
- மின்மிகை மாநிலமாக மாற்றிய பெருமை முதலமைச்சரையே சேரும்.
- இலங்கை பிரச்னையில் சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் முதலமைச்சர்.
- மாநிலமே மகிழும் வண்ணம் வளர்ச்சி தந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
- புதுமைகள் பல படைத்து பெருமை பெற்றவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
- எதிரிகளால் வெல்ல முடியாத மக்கள் சக்தியாக விளங்குகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது: ஓபிஎஸ்
- நில அபகரிப்பு சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்- பட்ஜெட்டில் ஓபிஎஸ்
- இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு
- மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு
- 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8.01% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது
- நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது: ஓபிஎஸ்
- மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு
- வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு
- 10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க சாதனை
- அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
- மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு
- போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன












Click it and Unblock the Notifications